காதல் என்பது பொதுவுடமை.. ஒரே நேரத்தில் 6 பேரை காதலித்த இளம்பெண்.. ஆறு பேரையும் ஒரே இடத்தில் சந்தித்த அதிர்ச்சி சம்பவம்..

  இன்றைய காலகட்டத்தில் காதல் என்பதற்கு உண்மையான அர்த்தம் துரோகம் என்று மாறிவிட்டதாக கூறப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. தேனிலவுக்கு கணவனை அழைத்து சென்று கூலிப்படையை வைத்து கொலை செய்யும் அளவுக்கு காதல்…

love

 

இன்றைய காலகட்டத்தில் காதல் என்பதற்கு உண்மையான அர்த்தம் துரோகம் என்று மாறிவிட்டதாக கூறப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. தேனிலவுக்கு கணவனை அழைத்து சென்று கூலிப்படையை வைத்து கொலை செய்யும் அளவுக்கு காதல் மற்றும் உறவுகள் பொய்யாக இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பெண் ஒரே நேரத்தில் ஆறு பேருடன் டேட்டிங் செய்து காதலித்து வந்த நிலையில், தற்செயலாக அந்த ஆறு பேரும் அந்த இளம் பெண்ணை ஒரே நேரத்தில் சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த அந்த இளம் பெண், ஒரே நேரத்தில் ஆறு பேரை காதலித்து, அவர்களுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார். அப்போது, அந்த ஆறு காதலர்களில் ஒருவர், தனது காதலிக்கு இன்னும் சில உறவுகள் இருப்பதை கண்டுபிடித்துவிட்டார். அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த வாலிபர் தனது காதலியை ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்துச் சென்றார். இதனை அடுத்து, அவர் தனது காதலிக்கு தெரியாமல், அவளது மீதமுள்ள ஐந்து காதலர்களுக்கும் போன் செய்து வரவழைத்தார்.

ஐந்து பேரும் அந்த ரெஸ்டாரண்டுக்கு வந்தபோது, அந்த இளம் பெண் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டார். ஒரே நேரத்தில் தான் காதலித்த ஆறு பேரையும் ஒரே இடத்தில் பார்ப்போம் என்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதனால் அவர் வாய் அடைத்துப்போய் நின்ற நிலையில், இதனை காதலர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.

இந்த வீடியோவுக்கு பலரும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். “ஒரு ஆண் நான்கு மனைவிகளை வைத்துக்கொள்ளலாம் என்றபோது, ஒரு பெண் ஆறு காதலர்களை வைத்திருக்கக் கூடாதா?” என்றவாறு நகைச்சுவையாகச் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்தப் பெண் ஆறு பேரை காதலிக்கவில்லை; அவர்களுடன் உளவியல் ரீதியில் பழகி ஆய்வு செய்துகொண்டிருந்தார் என்றும், விரைவில் அவர் தனது ஆய்வறிக்கையை வெளியிடுவார்” என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.

மொத்தத்தில், “காதல் என்பது தூய்மையானது என்பது மாறி, துரோகம் என்பதாக மாறிவிட்டது என்றும், உண்மையான காதல் என்பது வெகு அரிதாகிவிட்டது” என்றும் பலர் கருத்துகளில் பதிவு செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/DLky4QLS1cn/?utm_source=ig_web_copy_link