ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ரீஸி மாவட்டத்தை சேர்ந்த அந்த 45 வயது பெண்மணி, தனது ஆடுகளை மேய்க்க நிஷாத் பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவருடைய உடல் மரத்தில் கட்டப்பட்ட நிலையில், உடைகள் கிழிக்கப்பட்டு, கைகளில் கட்டுகள் மற்றும் முகத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு காயங்களுடன் காணப்பட்டது. அவர் துன்புறுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பெண்ணின் உடலை கண்ட கிராம மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், அந்த பெண்மணியை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்த கொடூரக் கொலை தொடர்பாக போலீசார் ஒரு சந்தேகபடும் ஒரு நபரை கைது செய்துள்ளனர். மேலும் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது தீவிரமாக தேடுதல் நடைபெற்று வருகிறது. ”
ஸ்ரீநகரில் உள்ள பொதுமக்கள் இந்த கொலைக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். போலீசார் பொதுமக்களிடம் அமைதி காக்கவும், விசாரணையில் ஒத்துழைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுவும் பயங்கரவாதிகளின் செயலாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
