இந்த தாக்குதலுக்கு கண்டனமாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். “இந்தியாவை தாக்கினால், மறக்க முடியாத பதிலடி தரப்படும்” என்பதையே அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்தால் அதற்கு பதிலளிப்போம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பல்வேறு துறைகளில் பெரும் வித்தியாசம் உள்ளது. இந்தியா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு ஆக இருக்கிறது. விரைவில் அது மூன்றாவது இடத்தை அடையவுள்ளது. ஆனால் பாகிஸ்தான் கடன் சுமையில் மூழ்கி உள்ளது. அரசியல் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதன் பொருளாதாரம் உலக வங்கியின் உதவியில்தான் இயங்குகிறது.
போருக்கு பாகிஸ்தான் தயாரா? என்பது தான் மிகப்பெரிய கேள்வி. பாகிஸ்தான் தற்போது ஆயுதங்களும், குண்டுகளும் குறைவாக இருக்கிறது. யுக்ரைனுக்கு வழங்கிய ஆயுதங்களால், பாகிஸ்தான் தன்னுடைய ராணுவ தேவை பூர்த்திக்கே கடினத்தை எதிர்கொள்கிறது. Pakistan Ordnance Factories நிறுவனமும் பழமையான உற்பத்தி முறைகளை பயன்படுத்தி வருகின்றது. இதனால், ஒரு முழுமையான போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் தான் தற்காத்து கொள்ள முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா தாக்கினால் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் கூறினாலும், இரண்டு நாட்களுக்கு மேல் இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் இல்லை, மேலும் தன்னை இரண்டு நாட்கள் தற்காத்து கொள்ளலாம், அதன்பின் ஒன்று தோல்வி அல்லது சரண்டர் முடிவை தான் பாகிஸ்தான் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும்.நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
