ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் 26 பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திய இந்தியா , இந்தியாவில் இருப்பவர்களையும் நாடு திரும்ப உத்தரவிட்டது. இது பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களில் ஒன்றாகும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பல பாகிஸ்தானியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். சிலர் வெளியேறாமல் இருந்தால், அவர்களை நாடு கடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்த சில நாட்களில் மேலும் சில பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும், தங்களது எல்லைகளில் உள்ள பாகிஸ்தான் குடிமக்களை அடையாளம் காணவும், அவர்களை நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்.
விசா நிறுத்தம் என்பது இந்தியாவின் பதிலடிகளில் ஒரு பகுதியே மட்டுமே. மற்றொரு முக்கியமான நடவடிக்கை ‘சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை’ (Indus Waters Treaty) நிறுத்தியது ஆகும். இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே இந்தஸ் ஆறு மற்றும் அதன் ஐந்து துணை ஆறுகள் (பீஸ், சினாப், ஜெலம், ரவி, சட்லெஜ்) பற்றிய நீர் பகிர்வு முறையை நிர்வகிக்கிறது.
இந்த நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்புக்காக மிக அவசியமானவை என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு தகுந்த பதில் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளன என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளால் இரு நாடுகள் இடையிலான ஒட்டுமொத்த உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் தற்போது இந்தியா எந்தவிதமான நடவடிக்கை எடுக்கும் என்பதை கவனிக்கின்றன. போர் நடவடிக்கையா அல்லது சுமூகமான வியூகம் வழியாக தீர்வா? என்பதை கவனித்து கொண்டிருக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
