விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், இன்றைய எபிசோடில் விஜயாவை அண்ணாமலை, முத்து, மீனா, சுருதி ஆகியோர் மாறி மாறி கேலி செய்கின்றனர். “நீங்கள் கொண்டு வந்த மருமகள், நீங்கள் பாராட்டிய மருமகள் ரோகிணிக்கு இப்ப என்ன ஆச்சு என்று கூற ’போதும்’ என விஜயா கத்துகிறார். பின்னர் தான் அது கனவு என்பது தெரிய வருகிறது. இதனை அடுத்து விஜய் எல்லோரிடமும் சமாளிக்கிறார்.
அதன் பின்னர் பாட்டி, “நான் ஊருக்குள்ள போகிறேன்’ என்று கூறி எல்லோருக்கும் அறிவுரை கூறுகிறார். மூன்று பேரன்களும் மூன்று குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் வீடு கலகலப்பாக இருக்கும் என்றும், வீட்டில் எந்த பிரச்சனையும் வராது என்றும் அறிவுரை கூறி பாட்டி புறப்பட்டு விடுகிறார்.
பாட்டி சென்றவுடன் மனோஜ் ஷோரூம் கிளம்பி கொண்டிருப்பதற்குள், ரோகிணி ஏதோ பேச வருகிறார். ஆனால் ரோகிணியை முகம் கொடுத்துப் பார்க்காத மனோஜ், அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பும்போது விஜயா தடுத்து நிறுத்துகிறார்.
“மனோஜ், இனிமேல் நீ அவளுடன் பேசக்கூடாது. என்னையே ஏமாற்றி இருக்கிறாள். பாட்டி ஏதோ சமாதானத்திற்கு சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் அதை எல்லாம் நம்மால் பின்பற்ற முடியாது. இனிமேல் ரோகிணி ஷோரூம் வரக்கூடாது, உன்னிடம் பேசக்கூடாது” என்று கண்டிஷன் போடுகிறார்.
மேலும், “அதை என் முன்னாடியே ரோகிணியிடம் சொல்லிவிடு” என்று கூறி, ரோகிணியை அழைத்த மனோஜ், “இனிமேல் நீ ஷோரூம் வரவேண்டாம்” என்று கூறுகிறார். அப்போது ரோகிணி “ஏன்?” என்று கேட்க, “உனக்குத் தெரியாதா? நீ என்ன சின்ன பாப்பாவா?” என்று ஆத்திரத்துடன் விஜயா கூறுகிறார்.
“ஷோரூம் கணக்கு வழக்கு எல்லாம் எனக்குத் தான் தெரியும். யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கணும், நமக்கு யார் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தான் தெரியும்” என்று ரோகிணீ கூற, “அதெல்லாம் மனோஜ் பார்த்துவிடுவான். அவன் எத்தனை டிகிரி படிச்சிருக்கான். இனிமேல் நீ ஷோரூம் போகக்கூடாது’ என்று கறாராக கூற ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
அப்போது மீனா ரோகிணிக்கு ஆதரவாக பேசும்போது, “உன்னை யாராவது கேட்டார்களா? போய் பேசாமல் உன் வேலையை பார்” என்று விஜயா அவரை அடக்கிவிடுகிறார். இதனை அடுத்து, மீனா ரோகிணியை பரிதாபமாக பார்க்க, ரோகிணி மீனாவை வன்மத்துடன் பார்க்கிறார்.
அதன் பின்னர், தனது அறைக்குள் வருத்தத்துடன் வரும் ரோகிணிக்கு, அவருடைய அம்மா போன் செய்கிறார். “ஏன் கல்யாணி பேசவில்லை?” என்று கேட்க,
“இங்கேயே எனக்கு பயங்கர டென்ஷன்” என்று கூறுகிறார். அவருடைய அம்மா, “இன்று எனக்கு பிறந்தநாள். முதல் ஆளாக நீ தான் போன் செய்து வாழ்த்து கூறுவாய், உன்னிடம் இருந்து போன் வரவில்லை என்பதால் தான் நான் பேசினேன்” என்று கூற,
அப்போது ரவியிடம் தனது அம்மா இறந்து விட்டதாக கூறியது ரோகிணிக்கு ஞாபகம் வருகிறது.
இதனை அடுத்து, அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் ரோகிணி,
“கண்டிப்பாக இன்று நான் வீட்டுக்கு வருகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து வெளியே கோவிலுக்கு சென்று சாப்பிடலாம்” என்று கூறுகிறார்.
அதன் பின்னர், “என்னுடைய அம்மாவின் பிறந்தநாளை கூட மறக்கும் அளவிற்கு என்னை டென்ஷன் படுத்திவிட்டாய். என்னை ‘பணக்காரன் மருமகள் இல்லை’ என்பதால், என்னை அவமானப்படுத்திவிட்டாய் அல்லவா? இதே மாதிரி உன்னையும், நான் கதற கதற ஒரு நாள் அழ வைப்பேன்” என்று வன்மத்துடன் ரோகிணி விஜயாவை நினைக்கும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
நாளைய எபிசோடில் ரோகிணி சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, “நீங்கள் எதற்காக சமைக்கிறீர்கள்?” என மீனா கேட்கிறார்.
அதற்கு ரோகிணி, “எனக்கு தேவையான உணவை நான்தான் சமைக்க வேண்டும் என்று அத்தை கூறிவிட்டார்கள்… ஆன்ட்டி கூறிவிட்டார்கள்” என்று கூற, அப்போது வரும் சுருதி,
“எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிவிட்டீர்களே?” என்று கூறி சிரிக்கிறார். அப்போது மீனாவும் சிரிக்க, மீனாவை கோபத்துடன் ரோகிணி பார்ப்பது போன்ற காட்சி உள்ளது.