உடலில் திருநீறு அணிய… அட இத்தனை இடங்களா? இவ்ளோ பலன்களா?

விபூதியைத் ‘திருநீறு’ என்றும் சொல்வார்கள். இந்துவாக உள்ள ஒருவன் கட்டாயமாக விபூதி அணிய வேண்டும். அதே போல சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் பட்டையும், வைணவத்தைச் சார்ந்தவர்கள் நாமத்தையும் நெற்றியில் போட்டுக் கொள்வார்கள். திருநீறு அணிவது…

thiruneeru

விபூதியைத் ‘திருநீறு’ என்றும் சொல்வார்கள். இந்துவாக உள்ள ஒருவன் கட்டாயமாக விபூதி அணிய வேண்டும். அதே போல சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் பட்டையும், வைணவத்தைச் சார்ந்தவர்கள் நாமத்தையும் நெற்றியில் போட்டுக் கொள்வார்கள்.

திருநீறு அணிவது எதற்கு என்றால் ‘முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடிசாம்பல் ஆவர்’ என்பதை நினைவுபடுத்தத்தான் என்பார்கள். அதாவது எவ்வளவுதான் பணம், வசதி, ஆடம்பரம் இருந்தாலும், ஆணவம் இருந்தாலும் கடைசியில் நாம் மரணத்தைத் தழுவியே தீர வேண்டும். அப்போது பிணமானதும் எரிக்கும் அந்த உடல் ஒரு கைப்பிடி சாம்பலில் அடங்கி விடும்.

அதனால்தான் அந்த நினைவு எப்போதும் நமக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தில் இருந்து விடுபட முடியும் என்பதற்காகவே தினமும் நெற்றி நிறைய திருநீறு அணியச் சொல்கிறார்கள். அதே போல உடலில் மொத்தம் எத்தனை இடங்களில் திருநீறு அணிய வேண்டும். இதனால் என்ன நன்மைகள்னு பார்க்கலாமா…

திருநீற்றை நம் உடலில் 18 இடங்களில் அணிந்து கொள்ளலாம். தலை நடுவில் (உச்சி), நெற்றி, மார்பு, தொப்புளுக்கு சற்று மேல், இடது தோள், வலது தோள், இடது கையின் நடுவில், வலது கையின் நடுவில், இடது மணிக்கட்டு, வலது மணிக்கட்டு, இடது இடுப்பு, வலது இடுப்பு, இடது கால் நடுவில், வலது கால் நடுவில், முதுகுக்குக் கீழ், கழுத்து, வலது காதில் ஒரு பொட்டு, இடது காதில் ஒரு பொட்டு

இவ்விதமாக திருநீறை அணிவதால் தடையில்லாத ஆன்மிக சிந்தனை நமது மனதை பண்படுத்தும். அளவில்லாத பொருட்செல்வத்துடன் , இறைவனின் அருட்செல்வத்தையும் பெற்றுத் தரும்.