காளியம்மாளை மறந்து போன தமிழக அரசியல்.. விஜய் கட்சி மட்டுமே ஒரே ஆப்ஷனா?

  நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய காளியம்மாள் சில நாட்கள் மட்டும் தலைப்பு செய்திகளில் இருந்தார். ஆனால், தற்போது தமிழக அரசியல் அவரை கிட்டத்தட்ட மறந்துவிட்டது என்று கூறலாம். தொகுதி மறுவரையறை…

kaliyammal

 

நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய காளியம்மாள் சில நாட்கள் மட்டும் தலைப்பு செய்திகளில் இருந்தார். ஆனால், தற்போது தமிழக அரசியல் அவரை கிட்டத்தட்ட மறந்துவிட்டது என்று கூறலாம்.

தொகுதி மறுவரையறை பிரச்சனை, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், மும்மொழி கொள்கை உள்ளிட்ட பிரச்சனைகள் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக மக்களும் காளியம்மாளை மறந்துவிட்டார்கள் போல் தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், இப்படியே சென்றால் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் என்று கருதிய காளியம்மாள், உடனடியாக ஒரு முடிவெடுக்க விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, திமுக சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், விரைவில் அவர் திமுகவில் சேரலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், திமுக தரப்பில் அவரை கட்சியில் சேர்க்க தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை திமுகவை கடுமையாக விமர்சித்தவரான காளியம்மாளை தற்போது கட்சியில் சேர்த்தால்,  தலைமைக்கு நெருடலாக இருக்கலாம் என்பதால், சில தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, திமுக தரப்பில் இன்னும் உறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதனை அடுத்து, அவருக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் விஜய்யின் தவெக தான் என்றும், அவர் தவெகவில் இணைய மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விஜய்யும் திமுகவை கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஏற்கனவே திமுகவை விமர்சித்த காளியம்மாளுக்கு அந்த கட்சி பொருத்தமாக இருக்கலாம் என்றும், வேறு எந்த கட்சியுடன் சேர்ந்தாலும் அவருக்கு எதிர்ப்பு உருவாகலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எப்படியும், விரைவில் காளியம்மாள் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில், தமிழக மக்களும், தமிழக அரசியலும் அவர் இருந்ததையே மறந்து விடும் நிலை உருவாகலாம். காளியம்மாள் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.