ரிலையன்ஸ் ஜியோ 100 ரூபாய் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் தினமும் 5ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு கிடைக்கும் என்றும் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாதாரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்றும் இதன் மூலம் ஐபிஎல் போட்டிகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்த திட்டம் வெறும் டேட்டா திட்டம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதில் போன் செய்யவும், எஸ்எம்எஸ் அனுப்பவும் முடியாது என்றும் இணையவழி தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு சிறப்பான திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் ரூ.100 திட்டத்தில் தினமும் பயனர்களுக்கு 5GB மட்டுமே இருப்பதால் எல்லையில்லா ஜியோ ஹாட்ஸ்டார் பயன்படுத்த போதாது என்பதும் குறிப்பிடத்தக்கது.