பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளை தீவிரமாக சோதனை செய்ய சுங்கத்துறை நடவடிக்கை எடுத்தது.
அப்போது, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பயணி ஒருவரின் சட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகள் தங்களது X பக்கத்தில் உறுதி செய்துள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதோடு, பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நடிகை ரன்யா ராவ் சுமார் 12.5 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்தத் தங்கக் கடத்தல் நடவடிக்கையில் அரசியல்வாதிகள் அல்லது பெரும் பணக்காரர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதே குழுவே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளையும் பயன்படுத்தி தங்கம் கடத்தி இருக்கலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.