ஐபிஎல் போட்டியிலும் விளையாட மாட்டாரா பும்ரா? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவு?

  இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக தற்போது சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் இருக்கிறார். இதற்கிடையில், மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடரிலும் சில போட்டிகளில்…

Bumrah Record

 

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக தற்போது சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் இருக்கிறார். இதற்கிடையில், மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடரிலும் சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்த போட்டியில் பும்ரா காயம் அடைந்தார். அதன் பின்னர், அவர் தற்போது காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நன்றாக இருந்தாலும், பந்து வீசும் அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

பும்ரா உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும், ஏப்ரல் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, முதல் சில போட்டிகளில் பும்ரா விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கமாக சில போட்டிகள் கடினமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், பும்ரா விரைவில் குணமாகி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.