இந்த கும்பமேளாவின் மூலம், உத்தரப்பிரதேச அரசுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைத்ததாகவும், அதுமட்டுமின்றி, பிரயாக்ராஜ் நகரில் உள்ள வணிகம் பெரும் லாபம் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் முடிவடைந்த இந்த கும்பமேளாவுக்கு பிறகு, அடுத்த கும்பமேளா எப்போது, எங்கே என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த கும்பமேளா 2027ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் நடைபெற உள்ளது.
நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் 2027ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி கும்பமேளா தொடங்கும் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. ஏற்கனவே, 2015ஆம் ஆண்டு நாசிக்கில் கும்பமேளா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2027ஆம் ஆண்டு நாசிக்கில் ஒரு கும்பமேளா நடைபெறவுள்ளதை தொடர்ந்து, 2028ஆம் ஆண்டு உஜ்ஜைனில் முழு கும்பமேளா நடைபெற உள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டு, தற்போது நடைபெற்ற பிரயாக்ராஜ் நகரில் மீண்டும் ஒரு கும்பமேளா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.