வீட்டில் விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை… தெரியாதவங்க படிச்சிக்கோங்க
இன்று திருமணம் ஆகிவிட்டால் அந்த மணப்பெண்ணை வீட்டிற்கு வந்த குத்துவிளக்காக, மகாலட்சுமியாகக் கொண்டாடுகிறார்கள். வீட்டுக்கு வந்த மகாலட்சுமி, குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு, விளக்கேற்ற வந்த மகாலட்சுமி அப்படி இப்படின்னு பெண்ணைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
அப்படிப் பார்க்கும் போது விளக்கேற்றுபவள் என்றாலே அது கட்டிய மனைவியைத் தான் குறிக்கிறது. அது இருக்கட்டும். சிலர் விளக்கேற்றுவதிலும் ஏனோ தானோவென அதன் அருமை தெரியாமல் கருத்து புரியாமல் விளக்கு ஏற்றுகின்றனர். ஆனால் அதில் என்ன தப்பு என்று சொல்பவர்கள் இதை அவசியம் படிங்க. முதலில் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாமா…
வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், பச்சரிசி, காய்கறிகள் ஆகியவற்றை இரவில் உணவாக வாங்கவோ அல்லது கொடுக்கவோ கூடாது. விளக்கு வைத்த பிறகு தலை சீவக்கூடாது. தலைவாசல் படியில் அமர்ந்து பேன் பார்க்கக்கூடாது. விளக்கு ஏற்றிய பிறகு குளிக்கக் கூடாது. விளக்கு ஏற்றிய பிறகு வீடு கூட்டி குப்பைகளை வெளியே கொட்டக்கூடாது. இரண்டு கைகளால் தலையை சொரியக்கூடாது.
இப்போதெல்லாம் பெண்கள் பழைய மாதிரி இல்லை. பாரதி கண்ட புரட்சிப்பெண்களாய் படிக்க ஆரம்பித்து விட்டனர். அதே போல மகாலட்சுமிக்கு நிகராகவும் பெண்களை ஒப்பிடுகின்றனர். பெண்ணானவள் நினைத்தால் ஒன்றை 100 ஆக்கவும் முடியும். அதை இல்லாமல் ஆக்கவும் முடியும். அது ஆணின் கைகளில். பெண்களின் மனசுக்குப் பிடித்தவராக வாழ்ந்தால் போதும். நீங்க கேட்டது மட்டும் இல்லாம கேட்காததும் கிடைக்கும்.