கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு சொல்வாங்க. அந்த வகையில் கண்திருஷ்டி என்பது நம்மை எவ்வளவு தான் நல்லா இருந்தாலும் வீழ்ச்சி அடைய வைத்துவிடும். இதற்காக பெரிய பெரிய பணக்கார்களே பல பரிகாரங்களைச் செய்வார்கள். அவர்கள் பெரிய கடைகள் வைத்திருந்தால், கடையை அடைத்ததும் பெரிய திருஷ்டி பூசணிக்காயினுள் குங்குமம் வைத்து அதைக் கடையின் வாசலில் போட்டு இரண்டாக உடைத்து விடுவர்.
அதே போல சிலர் சீனாக்காரம், வத்தல், எலுமிச்சைப்பழம் என கட்டித் தொங்க விடுவர். இப்படி கிராமங்களில் விதவிதமாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். கண்திருஷ்டி கணபதி படத்தை வீட்டின் வாசலில் மாட்டி இருப்பார்கள். கண்திருஷ்டிப் பூசணிக்காயை மொட்டை மாடியில் வைத்து இருப்பார்கள். இப்படி அந்த நேரத்தில் புதிதாக வீடு கட்டிப் பால் காய்ச்சுவதற்கு முன்னாலேயே இப்படி ஒரு பூசணிக்காயில் அரக்கன் போன்ற கண்திருஷ்டி படத்தை வரைந்து வீட்டின் முகப்புல உயரத்தில் வைத்து இருப்பார்கள்.
குறிப்பாக கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் பலர் வீட்டு வாசலில் எலுமிச்சைப் பழத்தை சரி பாதியாக வெட்டி அவற்றில் குங்குமம் தடவி வைத்திருப்பார்கள். இவ்வாறு வெட்டி குங்குமம் தடவி விட்டு நிலைவாசலில் வைப்பதினால் திருஷ்டியைப் போக்குமா என்று நீங்கள் கேட்கலாம். கேட்காமலா வாரந்தோறும் இப்படி பல விஷயங்களைச் செய்கிறார்கள்? இந்த எலுமிச்சை பழம் எப்படி தடுக்கிறதுன்னு பாருங்க.
உண்மையில் எலுமிச்சை பழம் திருஷ்டியைத் தாண்டி எதிர்மறையான விஷயங்களை நமது வீட்டில் அண்டவிடாது. ஆக எலுமிச்சை பழத்தை கட் செய்து நமது வீட்டு வாசலில் வைக்கலாம். இருபுறமும் அதனை எந்தக்கிழமையில் வைக்க வேண்டும் என்றால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் வைப்பது மிகவும் சிறந்த பலன்களைக் கொடுக்கும். அப்படி வைக்கும்போது அவற்றில் குங்குமம் தடவி வைக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை மாற்றி விடுவது மிகவும் சிறந்தது.