கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த முடியாதுன்னு நடுத்தர வர்க்கத்தினர் சொல்வார்கள். அதே நேரம் கடனை அடைக்க முடியாமல் வட்டியைக் கட்டவே திணறுவர். இங்கு சாப்பிடவே வழியில்லை. கடனை எப்படி அடைப்பது? வட்டி கட்டவே திணறுது. வாழ்நாள் முழுக்க உண்ணாம, தின்னாம வட்டியை மட்டும் கட்டிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்னு புலம்புவாங்க.
அதேநேரம் கோவிலுக்குச் சென்று கடவுளிடம் வேண்டும்போது எல்லாம் என்னென்ன கோரிக்கைகள் எல்லாம் உண்டோ அதை எல்லாம் பெரிய லிஸ்ட்டே போட்டு ஒண்ணுவிடாம சொல்லிடுவாங்க. ஆனா நாமளும் சொல்லி சொல்லித்தான் பார்க்குறோம். வேண்டாத கடவுளே இல்லை. ஆனா நம்மோட கஷ்டம் மட்டும் அப்படியே இருக்கு. குறையவே இல்லைன்னு புலம்புவதையும் பார்த்திருப்போம். வாங்க என்ன பரிகாரம் செய்றதுன்னு பார்க்கலாம்.
வியாழக்கிழமைகளில் கோவிலுக்கு அரிசி தானம் செய்யுங்கள். மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். விஷ்ணுவை வழிபடுங்கள். கோவிலில் மஞ்சள் துணி சாற்றுங்கள். வீட்டில் குபேர விளக்கு ஏற்றுங்கள். இந்தப் பரிகாரம் எதற்கு என்கிறீர்களா? கடன்களைக் குறைக்க, வருமானத்தை அதிகரிக்க, வீட்டில் செல்வம் பெருக, மன அமைதி கிடைக்க என்று இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.
கடன் மட்டும் இல்லன்னா வாழ்க்கை ஜெகஜோதியா இருக்கும். நாலு காசு உழைச்சாலும் நிம்மதியா இருந்துட்டுப் போயிடலாம்யான்னு கிராமத்துல பெரியவங்க சொல்வாங்க. அது உண்மைதான். கடன் இருக்கும்பட்சத்தில் நாம் வாங்குற சம்பளத்தில் பாதிக்குப் பாதி அதற்கே போய்விடும். அப்புறம் எங்கிருந்து நிம்மதி வரும். மாதாமாதம் கடன் தான் தாண்டவமாடும்.
அதனால் கடன் வாங்குவது தவறில்லை. உங்கள் வருமானத்திற்கு ஏற்ப கடன் வாங்குங்கள். விரலுக்கேத்த வீக்கம்தான். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’. அதனால முடிஞ்ச அளவு கடன் வாங்காம இருங்க. இல்லன்னா கட்ட முடிந்த அளவு கடன் வாங்குங்க.