10 நிமிடங்களில் ஆப்பிள் தயாரிப்புகள் டெலிவரி.. 10 நகரங்களில் அறிமுகம் செய்யும் Blinkit..!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் பத்தே நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என Blinkit நிறுவனம் அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஆப்பிள் ஐபோன் 16 மாடலை ஆர்டர் செய்தால்…

Blinkit

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் பத்தே நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என Blinkit நிறுவனம் அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஆப்பிள் ஐபோன் 16 மாடலை ஆர்டர் செய்தால் 10 நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு Blinkit அறிவித்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில், தற்போது மேலும் சில ஆப்பிள் தயாரிப்புகளை ஆர்டர் செய்த பத்து நிமிடத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என்றும் இதற்காக இந்த சேவையை இந்தியாவில் உள்ள 11 நகரங்களில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

ஆப்பிள் தயாரிப்புகளான மேக் ஏர், ஐபேட், ஐபாட் உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்தால், அடுத்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும். இந்த சேவை டெல்லி, மும்பை, புனே, லக்னோ, அகமதாபாத், சண்டிகர், சென்னை, ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்பிள் தயாரிப்புகளுக்கு வங்கி தள்ளுபடியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், ஆப்பிள் தயாரிப்புகளை Blinkit நிறுவனத்தின் இணையதளம் மற்றும் செயலி ஆகியவற்றில் எதில் வேண்டுமானாலும் ஆர்டர் செய்தால் பத்து நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்நிறுவனம் மளிகை பொருட்கள் உட்பட அன்றாட பொருள்களை மிக விரைவில் டெலிவரி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.