ஆப்பிளின் புதிய பட்ஜெட் மாடல் iPhone 16e இந்தியாவில் வெளியாகியுள்ளது. iOS 18 மூலம் இயங்கும் இந்த மாடல், 6.1-இன்ச் OLED திரை மற்றும் A18 சிப்பைக் கொண்டுள்ளது.
iPhone 16e விலை
128GB – ₹59,900
256GB – ₹69,900
512GB – ₹89,900
இந்த ஸ்மார்ட்போன் தற்போது முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 28 முதல் விற்பனை தொடங்கும். கருப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கும்.
iPhone 16e அம்சங்கள்
திரை – 6.1-இன்ச் Super Retina XDR OLED, 60Hz புதுப்பிப்பு வீதம்
பிராசஸர் – 3nm A18 சிப், 8GB RAM
கேமரா – 48MP பின்புற OIS, 12MP TrueDepth முன்புற கேமரா
இணைப்பு – 5G, Wi-Fi 6, Bluetooth 5.3, NFC, GPS
சார்ஜிங் – USB Type-C, 18W வயர்டு, 7.5W வயர்லெஸ் சார்ஜிங்
பாதுகாப்பு – Face ID
iPhone 16e, ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களை ஆதரிக்கிறது மற்றும் செயற்கைக்கோள் SOS உதவியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
