தேவா தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர் 36 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் தேவா.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தேவா தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் சிறிது காலம் பணியாற்றினார். வயலும் வாழ்வும் என்ற நிகழ்ச்சியில் பாடலுக்கு இசையமைத்தார். 1989ம் ஆண்டு மனசுக்கு ஏத்த மகராசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. பல வெற்றிகரமான கானா பாடல்களை உருவாக்கியவர் தேவா.
இவரது சிறப்பான பணிக்காக எம் எஸ் விஸ்வநாதன் இவரை தேனிசைத் தென்றல் தேவா என்று அழைத்தார். அது மட்டுமல்லாமல் சமய பக்தி திரைப்பட பாடல்களுக்காகவும் இவர் பிரபலமானவர். ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை பாட்ஷா முத்து ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து 1990களில் புகழி ன் உச்சிக்கு சென்றார் தேவா.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட தேவா Copyrights பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் என்னுடைய பாடல்களுக்கு நான் Copyrights கேட்க மாட்டேன். ஏனென்றால் Copyrights கேட்டால் பணம் தான் கிடைக்கும். லியோ படத்தில் கரு கரு கருப்பாயி பாடலை பயன்படுத்தினார்கள். அப்படி பயன்படுத்தும் போது எனக்கு மறுபடியும் புகழ் கிடைக்கிறது. இன்றைய ஜெனரேஷன் பசங்களும் மக்களும் என்னை பற்றி பேசுகிறார்கள். எனக்கு அதுவே போதுமானது என்று ஓபனாக பேசியிருக்கிறார் தேவா.
