Bigg Boss Tamil Season 8 : சவுந்தர்யா பத்தி ஆனந்தி தப்பு தப்பா பேசுறாங்க தெரியுமா.. சிவகுமாரின் துணிச்சல்.. சைலண்டான ரவீந்தர்

பிக் பாஸ் வீட்டிற்குள் எலிமினேட் ஆகி இருந்த போட்டியாளர்கள் மீண்டும் நுழைவதற்கு வாய்ப்பு கிடைத்த போதும் பலரும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. என்னதான் அவர்கள் ஃபைனலுக்கு முன்னேற முடியாது என்றாலும்…

RJ ananthi about Soundariya

பிக் பாஸ் வீட்டிற்குள் எலிமினேட் ஆகி இருந்த போட்டியாளர்கள் மீண்டும் நுழைவதற்கு வாய்ப்பு கிடைத்த போதும் பலரும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. என்னதான் அவர்கள் ஃபைனலுக்கு முன்னேற முடியாது என்றாலும் ஆரம்பத்தில் மிக குறைந்த நாட்களிலேயே வெளியேறி மோசமான பெயரை சந்தித்திருந்த நிலையில் மீண்டும் அதனையாவது சரி செய்து விட்டு போவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இருந்து வந்தது.

ஆனால் சாச்சனா, வர்ஷினி, சுனிதா உள்ளிட்ட பலருமே மிகச் சிறப்பாக அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் சௌந்தர்யா உள்ளிட்ட சிலரை டார்கெட் செய்து ஆடி வருவதும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் கடுப்பை தான் ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சாச்சனா சிறப்பாக பேசக்கூட முடியாமல் தடுமாறும் நிலையில் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு சௌந்தர்யாவை வீழ்த்த திட்டம் போடுவது பலரை எரிச்சல் அடையும் வைத்துள்ளது.

சிவகுமாரின் துணிச்சல்

இதே போல சௌந்தர்யா அழுது மக்களின் அனுதாபத்தை பெறுவதாக வர்ஷினி தெரிவித்திருந்த நிலையில் மறுநாள் அவரே கண்ணீர் வடித்திருந்ததை சௌந்தர்யாவின் ரசிகர்கள் அதிகமாக கிண்டல் செய்திருந்தனர். 90 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருப்பதே சவாலான விஷயமாக இருந்த போதும் அப்படி நிலைத்து நின்ற சௌந்தர்யாவை வேண்டுமென்றே பலரும் டார்கெட் செய்து தவறாகவும் சித்தரித்து வருகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத சவுந்தர்யா, தற்போது இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற நோக்கத்திலும் ஆடி வருகிறார். அப்படி ஒரு சூழலில் சௌந்தர்யாவை பல போட்டியாளர்கள் இலக்காக வைத்து பேசியது பற்றி சிவகுமார் சில கருத்துக்களை ஃபேட்மேன் ரவீந்தரிடம் தெரிவிக்கிறார்.

ஆனந்தி அப்படி பேசலாமா?

“தர்ஷிகா, ஆனந்தி, சாச்சனா என பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன அனைவரது நேர்காணல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் அனைவருமே அவர்களுக்கு எதிராக இருக்கும் சௌந்தர்யாவை மட்டும்தான் தவறாக விமர்சனம் செய்திருந்தனர். அதிலும் ஆனந்தி போன்ற ஒரு புத்திசாலியான பெண், சௌந்தர்யாவை பற்றி தப்பு தப்பாக வெளியே நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார்.
Soundariya Sad

உள்ளே இருப்பவர்கள் எப்படி ஆட வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டபோது ஏன் அதை பற்றி தவறாக பேச வேண்டும். அது மட்டும் இல்லாமல் சிறப்பாக ஆடிய சிலரே பிக் பாஸ் வீட்டை வீட்டு வெளியே சென்று விட்டனர்” என சௌந்தர்யாவுக்கு எதிரான விமர்சனங்களை சுக்குநூறாக உடைத்திருந்தார் சிவகுமார்.

இதன் பின்னர் பேசும் ஃபேட்மேன் ரவீந்தர், “வெளியே இருந்து வருபவர்கள் என்ன பேசினாலும் உள்ளே இருப்பவர்களின் உழைப்புக்கு தான் இந்த போட்டியில் முடிவு கிடைக்கும்” என தெரிவிக்கிறார். ஆனால் அதே நேரத்தில் இதே ஃபேட்மேன் ரவீந்தர், சௌந்தர்யாவை டார்கெட் செய்து விளையாடும்படி வர்ஷினி, சாச்சனா உள்ளிட்ட பல போட்டியாளர்களிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.