Soundarya and Varshini : 95 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் சவுந்தர்யா, முத்துக்குமரன், தீபக் மற்றும் ஜாக்குலின் ஆகிய 4 பேரும் பலம் வாய்ந்த போட்டியாளர்களாக விளங்கி வருகின்றனர். ஆனால், அதே நேரத்தில் இதில் சவுந்தர்யாவுக்கு விழும் வாக்குகள் PR மூலம் தான் என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. மற்றபடி கேம் என வரும் போது சவுந்தர்யா எதுவுமே செய்யவில்லை என்றும் எந்த விஷயமும் பிக் பாஸ் வீட்டில் அவர் செய்வதே இல்லை என்றும் விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே, ஏற்கனவே எலிமினேட் ஆகி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 8 போட்டிகள் வருகை தந்திருந்தனர். அதில் பேட்மேன் ரவீந்தர், வர்ஷினி, ரியா, சாச்சனா, சுனிதா உள்ளிட்ட பலரும் சவுந்தர்யாவை டார்கெட் செய்து வருவதாகவே தெரிகிறது. அவர் எந்த விளையாட்டும் விளையாடவில்லை என்றும் PR ஆதரவால் ஆடி வரும் சவுந்தர்யாவின் ஆட்டத்தை குலைக்க வேண்டும் என்பதையும் இந்த 8 பேரும் சேர்ந்து முடிவு செய்திருந்தனர்.
கண்ணீர் விட்ட சவுந்தர்யா
இதற்கு மத்தியில், ரியா, வர்ஷினி, சாச்சனா உள்ளிட்ட பலரும் சவுந்தர்யா இந்த வீட்டில் இத்தனை நாட்கள் இருக்க வேண்டிய போட்டியாளரே இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் அவரது ஆட்டத்தை உடைத்து வெளியே அனுப்புவதற்கும் முதலிலேயே திட்டம் போட்டிருந்த இந்த கும்பல், அதற்கான காயையும் சரியாக நகர்த்தி இருந்தது. 95 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்தும் தன்னை எல்லோரும் ஏன் விமர்சிக்கிறார்கள் என சவுந்தர்யா கண்ணீர் விட்டு அழ, பிக் பாஸ் உள்ளே அழைத்து அவருக்கு ஆறுதலும் சொல்லி இருந்தார்.
அதுவும் காதலியிடம் பேசுவது போல அக்கறையாக சவுந்தர்யாவிடம் பேசிய பிக் பாஸ், மனம் தளராமல் உங்கள் ஆட்டத்தை ஆடும்படியும் அறிவுரை கூறி அனுப்பி வைத்திருந்தார். சவுந்தர்யா பற்றி விமர்சனம் இருக்கும் அதே வேளையில், ரியா, வர்ஷினி, சுனிதா, சாச்சனா ஆகியோரை கூட பலர் விமர்சித்து வருகின்றனர்.
நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க
இதற்கு நடுவே வர்ஷினி செய்த ஒரு சம்பவமும் தற்போது பலரை கொந்தளிக்க வைத்துள்ளது. சவுந்தர்யா பற்றி அனைவரும் விமர்சித்த பின்னர் அவரை அழைத்து பேசும் வர்ஷினி, “நீ எப்போதும் கேமரா முன் தேவையில்லாமல் அழுது அனுதாபம் தேடி கொள்கிறாய். அதை உள்ளே சொல்ல மறந்து விட்டேன்” என தெரிவிக்கிறார்.
தான் மக்களின் வாக்குக்காக அப்படி செய்யவில்லை என்ற போதும் வர்ஷினி அப்படி சொன்னது சவுந்தர்யாவை பாதிக்க, உடனே அவர் முகத்தை மூடிய படி அழவும் ஆரம்பிக்கிறார். இதை பார்த்து கொஞ்சம் கூட வருந்தாத வர்ஷினி மற்றும் சாச்சனா ஆகியோர், “சவ்ந்தர்யா தனது கேமை ஆரம்பித்து விட்டார். தான் நல்லவள் போல அழுதபடி காண்பிக்க தொடங்கி விட்டார்.
இதை விட என்ன வேணும். மக்களை ஏமாத்த அழுகிறார். இதை விட நாங்கள் இதை வெளிக்காட்ட முடியாது” என கூறுவதுடன் சாச்சானாவுடன் சேர்ந்து மக்கள் சிம்பதி வாக்கை சவுந்தர்யாவுக்கு அளித்து விடாதீர்கள் என்றும் கூறுகிறார் வர்ஷினி. என்ன தான் சவுந்தர்யா மீது விமர்சனங்கள் இருந்தாலும் இப்படி அவர் அழும் போதும் நடிப்பு எனக்கூறி நகையாடும் வர்ஷினி, சாச்சனா ஆகியோரை அவரது ரசிகர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.