பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த வீட்டிற்குள் போட்டியாளராக வரும் பலருக்கும் ஒரே ஒரு டாஸ்க் நடைபெறும் போது நிச்சயம் இருந்துவிட வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். Freeze Task என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டிற்குள் குடும்பத்தினர் வரத் தொடங்கும் வாரம், மிக முக்கியமான மற்றும் எமோஷனல் நிறைந்த நாட்களாக இருக்கும்.
இந்த டாஸ்க் சுமார் 75 முதல் 80 நாட்களுக்கு பிறகு நடைபெறும் என்ற நிலையில், அதுவரையில் எப்படியாவது பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து விடும் என்று கனவுகளுடன் வரும் பல போட்டியாளர்களும் பாதியிலேயே வெளியேற வேண்டிய சூழலும் உருவாகும். இதற்கு மத்தியில் தற்போது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8 வது சீசனில் ஃப்ரீஸ் டாஸ்க் ஆரம்பமாகி உள்ளது. இதன் முதல் நாளில் தீபக், மஞ்சரி, விஷால் மற்றும் ரயான் ஆகிய போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர்.
ஆரம்பமான Freeze Task
இதில் எந்த அளவுக்கு பல எமோஷனலான தருணங்கள் அரங்கேறி இருந்ததோ அதற்கு நிகராக பல வேடிக்கையான சம்பவங்களும் நிகழ்ந்திருந்தது. அதிலும் வி ஜே விஷாலின் தந்தை பேச தொடங்கினாலே சிரிப்பு வெடியாக தான் இருந்தது. இன்றைய காலத்து இளைஞர்களை போல சர்வ சாதாரணமாகவும் பல விஷயங்களை அவர் நகைச்சுவையாக உரையாடி இருந்தார். இதே போல தீபக்கின் மனைவியும் வேடிக்கையாக பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
அதிலும் முத்துக்குமரன், சௌந்தர்யா என பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பல போட்டியாளர்கள் எப்படி பேசுவார்களோ, எப்படி நடப்பார்களோ அதனை அப்படியே கண்முன் தீபக்கின் மனைவி கொண்டு வந்து நிறுத்தி இருந்ததும் சிறப்பம்சமாக அமைந்தது.
தீபக் கேட்ட கேள்வி
பிக் பாஸ் வீட்டிற்குள் தீபக்கின் மனைவி மற்றும் அவரது மகன்கள் அங்கே சிறந்த தருணங்களை கொண்டாடி இருந்த சூழலில் கடைசியாக அவர்கள் கிளம்பும் நேரத்தில் தீபக் கேட்ட கேள்வி ஒன்று ரசிகர்களை இன்னும் சிரிக்க வைத்துள்ளது. இத்தனை நாட்களாக வீட்டிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தீபக் இருப்பதால் அவரது கார் என்ன நிலைமையானது என்பது பற்றி மனைவியுடன் கேட்கும் அவர், ‘கார் எல்லாம் ஆன் பண்ணி ஆஃப் பண்றியா?’ என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஆண் தனது வீட்டில் இருந்து பத்து நாட்கள் மாறியிருந்தாலே அவரது பைக் அல்லது கார் என்ன ஆகிவிட்டது என்ற ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அப்படி பல ஆண்களின் முகமாக தீபக் பிரதிபலித்து கேட்ட கேள்வி ரசிகர்கள் மத்தியிலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.