பிக் பாஸ் 8: சவுந்தர்யாகிட்ட இவ்ளோ டிரஸ் இருக்கு, ஆனா.. பங்கம் செஞ்ச தீபக் மனைவி.. இதல்லவோ ஃபேமிலி என்ட்ரி..

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஏறக்குறைய 80 நாட்களை எட்டியுள்ள நிலையில் பல போட்டியாளர்களும் தங்களது குடும்பத்தினரை கொஞ்சம் இழந்து வருந்தி தான் வருகின்றனர். உள்ளே இருக்கும் பிரபலங்கள் பலரும் பெரும்பாலும் குறுகிய நாட்களுக்குள்…

Deepak Wife Troll Soundariya

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஏறக்குறைய 80 நாட்களை எட்டியுள்ள நிலையில் பல போட்டியாளர்களும் தங்களது குடும்பத்தினரை கொஞ்சம் இழந்து வருந்தி தான் வருகின்றனர். உள்ளே இருக்கும் பிரபலங்கள் பலரும் பெரும்பாலும் குறுகிய நாட்களுக்குள் தங்கள் குடும்பத்தினருடன் இருந்து விடுவார்கள் என்பதால் பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் அவர்கள் யாரையும் பார்க்காமல், பேசாமல் இருந்து வருவது நிச்சயம் ஏதாவது ஓரத்தில் மிகப்பெரிய வேதனையாக தான் இருந்து வரும்.

இதன் காரணமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து சீசன்களிலுமே 70 முதல் 80 நாட்களுக்குப் பிறகு ஃப்ரீஸ் டாஸ்க் (Freeze Task) என்ற பெயரில் பல போட்டியாளர்களின் குடும்பத்தினர் என்ட்ரி கொடுப்பார்கள். மிக சர்ப்ரைஸாக ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வீட்டிற்குள் வர அந்த இடமே எமோஷனலாகவும் சில நேரங்களில் உற்சாகத்திலும் திளைத்திருப்பதை நாம் கவனித்திருப்போம்.

Freeze Task ஆரம்பம்

அந்த வகையில் எட்டாவது பிக்பாஸ் சீசனிலும் தற்போது Freeze Task வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தீபக், மஞ்சரி, ரயான் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் பெற்றோர்களும், குடும்பத்தினரும் வீட்டிற்குள் வந்திருந்தனர். அந்த வகையில் இந்த சீசனில் ஃப்ரீஸ் டாஸ்கின் முதல் என்ட்ரியாக தீபக்கின் மனைவி மற்றும் மகன்கள் வந்திருந்தனர். ஆரம்பத்தில் இது கொஞ்சம் எமோஷனலாக இருந்தாலும் பின்னர் மெல்ல மெல்ல மிகக் கலகலப்பாகவும் மாறி இருந்தது.

அதிலும் தீபத்தின் மனைவி பிக் பாஸ் வீட்டில் இருந்த பல போட்டியாளர்களை பற்றி கலாய்த்து தள்ளிய விஷயங்கள் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. அந்த வகையில் அவர், போட்டியாளரான சௌந்தர்யா பற்றி வேடிக்கையாக சில கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார்.

ரப்ர் பேண்ட் இல்லையா மா..

“பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி ஒரு சீரியஸான விஷயங்கள் நடந்து கொண்டே இருந்தாலும் தனக்கு என்ன கவலை என்பது போல சௌந்தர்யா தனியாக அமர்ந்து தனது தலை முடியை வாரிக் கொண்டே இருப்பார். (சைகையிலும் தீபக்கின் மனைவி அதை செய்து காட்டுகிறார்). அடிக்கடி ஒரு பார்வையாளராக இதை பார்க்கும் போது யாராவது ஒரு ரப்பர் பேண்ட் கொடுங்கள் என்று தான் தோன்றும்” எனக் கூறியதுமே அங்கிருந்த அனைவருமே சத்தமாக சிரிக்க தொடங்கிவிட்டனர்.
Deepak Family in Freeze Task

தொடர்ந்து பேசும் தீபக்கின் மனைவி, “வீட்டில் இருந்து இத்தனை ஆடைகள் எடுத்து வந்த சௌந்தர்யாவிற்கு அவர்கள் யாருமே நான்கு ரப்பர் பேண்டை கொடுத்து அனுப்பவில்லை. அதேபோல சௌந்தர்யா கோபப்பட்டாலும் கூட பார்ப்பதற்கு காமெடியாக தான் இருக்கும். பல நேரங்களில் அவர் தனியாக முழித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது தான் செய்யும் தவறு இவ்வளவு பெரிய பிரச்சினையாகும் என்று நினைக்கவில்லை என்பது போன்றே ரியாக்ஷன் கொடுத்துக் கொண்டிருப்பார்” என்றும் தீபக்கின் மனைவி வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.