நிலம் தாத்தா பெயரில்.. ஆனால் பட்டா வேறு ஒருவர் பெயரில்.. அதை உங்கள் பெயரில் எப்படி மாற்றுவது?

சென்னை: இன்றைக்கு நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரம், பட்டா விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாத்தா பெயரில் நிலம் இருந்திருக்கிறது. ஆனால் பட்டாவோ அவரது அப்பா பெயரில் இல்லாமல் வேறு ஒருவர்…

The land Patta is in someone else's name, Can it be changed to your name?

சென்னை: இன்றைக்கு நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரம், பட்டா விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாத்தா பெயரில் நிலம் இருந்திருக்கிறது. ஆனால் பட்டாவோ அவரது அப்பா பெயரில் இல்லாமல் வேறு ஒருவர் பெயரில் இருந்துள்ளது. இவர் தனது பெயரில் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

பொதுவாக 80களில், 90களில் பத்திரப்பதிவு செய்த உடனேயே பட்டா வாங்கும் வழக்கம் இருந்தது இல்லை. பத்திரப்பதிவு செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவது வழக்கம். பட்டா வாங்காமல் விட்டுவிடுவார்கள். மகன்கள், பேரன்கள் அல்லது பேத்திகள் இன்று பட்டாவை மாற்ற தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பட்டா கிடைத்தது.. தற்போதைய சூழலில் தாத்தாவின் பெயரில் நிலம் இருந்தால், அதைனை உங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்த உடனேயே பட்டாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தாத்தா பெயரில் நிலம் இருந்ததது என்றால், பட்டா பெயர் மாற்றம் செய்ய நிலத்தின் உரிமையாளர் யார் என்பதற்கான ஆவணத்தையும், அதற்கு முந்தைய ஆவணத்தையும் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தாசில்தார் அலுவலகம் சென்று அங்குள்ள இ-சேவை மையம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ஏரியா மாநகராட்சியா அல்லது கிராமமா என்பதை அறிந்து அதற்கு உரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பத்தை பதிவு செய்து ரூபாய் 60 கட்டணம் பெற்றுக்கொண்டு ரசீது வழங்குவார்கள்.

அந்த ரசீதைப் பெற்றுக்கொண்டு சில நாட்கள் கழித்து நில நிர்வாக ஆணையரின் இணையத்திலேயே விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.. நீங்கள் விண்ணப்பித்தபடி உங்கள் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தால் அப்படியே ஒரு நகல் எடுத்துக் கொள்ளலாம். அதுதான் ஒரிஜினல் பட்டா.. அதை வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை பட்டாவை உங்களுக்கு டவுன்லோடு செய்ய தெரியவில்லை என்றால் இசேவை மையம்மூலம் பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

அதேநேரம் பட்டாவிற்கு இ சேவை மையங்களில் போய் விண்ணப்பிக்க முடியாதநிலை இருந்தால், கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று விண்ணப்பிக்க முடியும். ஏனெனில் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா கேட்டு போனாலும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் ஆகியோர் நேரில் வந்து பார்த்து சொத்தின் உரிமையாளரை உறுதி செய்து அதாவது புலத்தணிக்கை செய்தால் தான் தாசில்தார் பட்டா தருவார் . ஒருவேளை பட்டாவிற்கு மாற்றம் செய்து 15 நாட்கள் கடந்தும் உங்கள் பெயரில் மாறும்.

பொதுவாக பட்டா பெயர் மாற்றம் மட்டும் என்றால் விரைவில் கிடைக்கும்.நிலத்தை உட்பிரிவு செய்து அளந்து பார்த்து புதிய சர்வே எண் வழங்கி பட்டா கொடுக்க வேண்டுமென்றால் பல நாட்கள் காலதாமதம் ஆகிறது. பொதுவாக நிலத்தை அளந்து 30 நாளில் உட்பிரிவு பட்டா வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி நீங்கள் சட்டப்படி அவரிடம் அணுகலாம்.. விடாமல் அலைந்துதான் பட்டாவை வாங்க வேண்டியதிருக்கும்.