தாலி கட்டுறதுல இவ்ளோ விஷயம் இருக்கா..? அணிந்துள்ள தாலியில் இதெல்லாம் சேர்க்காதீங்க..!

திருமணம் ஆன பெண்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மட்டும் தாலி எனப்படும் மாங்கல்யக் கயிறு அணியப்படுவதில்லை. தாலி என்பது இந்தியப் பாரம்பரியத்தில் குறிப்பாக இந்துக்களின் நம்பிக்கையாகவும், தொன்று தொட்டு வரும் கலாச்சாரமாகவும் பின்பற்றப்படுகிறது.…

Thali

திருமணம் ஆன பெண்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மட்டும் தாலி எனப்படும் மாங்கல்யக் கயிறு அணியப்படுவதில்லை. தாலி என்பது இந்தியப் பாரம்பரியத்தில் குறிப்பாக இந்துக்களின் நம்பிக்கையாகவும், தொன்று தொட்டு வரும் கலாச்சாரமாகவும் பின்பற்றப்படுகிறது. தாலிக்கு நம்மூர் தாய்மார்கள் கொடுக்கும் மரியாதையிலிருந்தே தாலி என்பது எவ்வளவு சென்டிமெண்ட் ஆன அணிகலன் என்பது தெரியும்.

ஒவ்வொரு மதத்திற்கும், இனத்திற்கும், இருப்பிடத்திற்கும் தகுந்தாற்போல் மாங்கல்யம் என்பது வேறுபடும். எனினும் தாலி என்கிற கான்செப்ட் மட்டும் பெண்களுக்கு ஒன்றே. திருமண நிகழ்வில் மணமகன் தாலி அணிவிக்கும் போது அன்றுமுதல் இருவரும் அனைத்து சுக, துக்கங்களிலும் சரிபாதி என்ற நிலைக்கு வருகின்றனர். தாலி கட்டும் போது மூன்று முடிச்சுக்களுக்கும் கூட நிறைய அர்த்தங்கள் உண்டு. இப்படி இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப்போன தாலிக் கயிற்றினை மணமகன் அணிவிக்கும் போது கணவர் இறக்கும் வரையில் அவர்கள் அதனை கழட்டுவதில்லை. கணவனுக்கு முன்பாக மறைந்தாள் எனில் சுமங்கலி என்னும் பெருமிதத்தோடு செல்கிறாள்.

இப்பேர்ப்பட்ட தாலியை பெண்கள் அணிவதில் சில வரைமுறைகள் உள்ளன. அவ்வாறு தாலியை அணியும் போது கணவனுக்கு நீண்ட ஆயுளும், கணவன் – மனைவி உறவு சுமூகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. தாலியை முதன் முதலாக மஞ்சள் கயிற்றில் அணிவித்த பிறகு குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு அதில் கோர்க்கப்பட்டுள்ள மாங்கல்யத்தினை தாலி செயினில் கோர்க்கிறோம். தாலி செயினிலும் சிறிதளவிற்காகவது மஞ்சள் கயிறு இருப்பது அவசியம்.

தாலி அணியும் போது பெண்களின் மார்புக் குழியில் படும்படி அணியும் போது அவர்களுக்கு மார்பகங்கள் குறித்த நோய்களை அண்ட விடாமல் செய்யும் வல்லமை உண்டு. தாலிக் கயிற்றில் பலர் இரும்புப் பொருட்களை கோர்த்து வைத்திருப்பர். உதாரணமாக ஊக்கு, சுவாமி படங்களின் டாலர்கள், லாக்கெட்டுகளை மாட்டியிருப்பர். அவ்வாறு செய்வது தோஷத்திற்கு வழிவகுக்கும். தாலிக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும்.

வந்தாச்சு வந்தாச்சு மார்கழி… மறக்காம செய்ய உங்களுக்கு இருக்கு மூணு விஷயம்!

தாலி செயினோ அல்லது தாலிக் கயிற்றில் தங்கக் குழாய்களோ கோர்க்கும் போது ஒற்றைப் படையில் அமைய வேண்டும். உதாரணமாக இரண்டு பவுன் எனில் இதனுடன் ஒரு கிராம் அளவிற்காவது தங்க நாணயம் உள்ளிட்டவற்றை சேர்த்து அணிய வேண்டும். தாலிக்கயிறு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது நல்ல நாள் பார்த்துத்தான் மாற்ற வேண்டும். பெரும்பாலும் காலை அல்லது மாலை வேளைகளில் மாற்ற வேண்டும். மேலும் கிழக்கு நோக்கி பார்த்து மாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் கழுத்தினை விட்டு அகலாமல் கவனமுடன் கயிற்றினை மாற்ற வேண்டும்.

இன்று பல வீடுகளில் தாலிச் செயினை கழட்டும் வழக்கம் இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. திருமண பந்தத்தை குறிக்கும் தாலியை அவிழ்த்து வைக்கும் போது கணவன் – மனைவி இடையே உள்ள பரஸ்பர உறவில் விரிசல் ஏற்பட வழிவகுக்கும்.