Bigg Boss Tamil Season 8 Day 68 இல் எபிசோடு தொடங்கியதுமே கோவா கேங்கில் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. ஜெப்ரி கேங்கில் இருந்து பிரிந்து சென்று விட்டார் என்பது போல ராயன் மற்றும் ஜாக்குலின் பேசிக் கொண்டிருந்தார்கள்.கடந்த வாரம் விஜய் சேதுபதி திட்டிய பிறகு ஜெஃப்ரி தனியாக தான் சுற்றி கொண்டிருந்தார். கோவா கங்கை விட்டுவிட்டு பவித்ராவுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தார்.
இது பற்றி தான் ராயன் சௌந்தர்யா ஜாக்குலின் பேசிக்கொண்டிருந்தனர். மஞ்சரியும் தான் பார்த்த விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அடுத்ததாக இந்த வாரம் பெஸ்ட் பர்பாமன்ஸ் யாருன்னு கேட்பதற்கு பதிலாக பிக் பாஸ் இந்த பத்து வாரங்களில் சிறப்பாக நடந்து கொண்டவர் யார் என்று கேட்டிருந்தார்.
அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முத்துக்குமரன் விஷால் ஜாக்லின் ஆகியோர் தான். இவர்கள் 3 பேர்தான் அடுத்தவார தலைவர் போட்டியில் போட்டியிட இருக்கிறார்கள். அடுத்ததாக ஓர்ஸ்ட் பர்பாமன்ஸ் யார் என்று பார்க்கும்போது ரஞ்சித் சத்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்ததாக யாரும் எதிர்பாராத விதமாக விடுதலை 2 படத்தின் பிரமோஷனுக்காக சூரி மஞ்சுவாரியர் கென் கருணாஸ் ஆகிய மூன்று பேரும் வீட்டிற்குள் வந்தனர்.
இது ஹவுஸ்மேட்ஸ் அனைவர்க்கும் மிகப்பெரிய சர்ப்ரைசாக இருந்தது. முதலாவதாக பிக் பாஸ் தினம் தினமும் பாடலை ஒலிபரப்பு செய்தார். அதற்கு பிறகு படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சூரி விடுதலை படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதற்கு பிறகு மஞ்சு வாரியரிடம் ஹவுஸ்மேட்ஸ் மனசிலாயோ பாடலுக்கு எங்க கூட டான்ஸ் ஆடணும் என்று கேட்டனர்.
அதன்படி பிக் பாஸ் பாட்டு போட்டார். அனைவருடனும் மஞ்சுவாரியர் டான்ஸ் ஆடினார். அதற்குப் பிறகு சூரி ஜெப்ரிக்கு நாமினேஷன் பிரீ பாஸை வழங்கினார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி வார இறுதி எபிசோட் விஜய் சேதுபதி இந்த வார நிகழ்வுகளை எப்படி எடுத்துரைப்பர் என்பதை காண ஆவலாக தான் இருக்கிறது.