இன்று டி.வி.முன் ஒரு திரைப்படத்தினை குடும்பத்துடன் அமர்ந்து முகம் சுளிக்காமல், இரட்டை அர்த்த வசனம் இல்லாமல், ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இல்லாமல், வன்முறை இல்லாமல் ஒரு படம் பார்க்கலாம் என்றால் அது இயக்குநர் விக்ரமனின் படங்களாக மட்டுமே இருக்க முடியும். தமிழ் சினிமாவிற்கு மென்மையான படங்களை அளித்து விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என வளர்ந்து வந்த ஹீரோக்களை உச்ச நடிகர்களாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இவரது உதவியாளர்கள்தான் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் ராஜகுமாரன் ஆகியோர்.
விஜய்-க்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படமான பூவே உனக்காக படத்தினை விக்ரமன் இயக்கும் போது அவருடன் உதவியாளராகப் பணியாற்றியவர் இயக்குநர் ராஜகுமாரன். இப்போது உள்ள பூவே உனக்காக படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு எது தெரியுமா? நீ வருவாய் என..! அப்படத்தின் கதைக்கும், தலைப்பிற்கும் மிகுந்த பொருத்தமாக இருந்ததால் விக்ரமனுக்கு இது மிகவும் பிடித்துப் போனது. ஆனால் இணை இயக்குநரான ராஜகுமாரனுக்கு இந்த தலைப்பில் விருப்பமில்லை. இதனால் விக்ரமனிடம் தெரிவிக்க அவர் மீண்டும் மாற்றி பூவே உனக்காக என வைத்தார். படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
அல்லு அர்ஜூனை கைது செய்து அவரை நடத்திய விதம் சரியில்லை: நீதிபதி கண்டிப்பு..!
இந்நிலையில் ராஜகுமாரன் கையில் இரண்டு கதைகளை வைத்திருக்க, இயக்குநர் விக்ரமன் ஆர்.பி.சௌத்ரியிடம் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதன்படி முதலில் ராஜகுமாரன் எந்தத் தலைப்பினை வேண்டாம் நன்றாக இல்லை என்று பூவே உனக்காக படத்தில் முதலில் வைக்கப்பட்ட தலைப்பினை வேண்டாம் என்றாரோ அதே தலைப்பினை தனது இயக்கத்தில் உருவாகும் முதல் படத்திற்கு வைத்திருக்கிறார்.
அப்படி தலைப்பு வைக்கப்பட்ட படம் தான் நீ வருவாய் என. இப்படத்தின் பூஜை அழைப்பிதழை இயக்குநர் ராஜகுமாரன் விக்ரமனிடம் கொண்டு போய் கொடுக்க அழைப்பிதழில் தலைப்பினைப் பார்த்த விக்ரமன் அதிர்ச்சி அடைந்தார். இதுபோன்ற பல படங்களின் தலைப்புகளை அவர் அனுமதியின்றே சினிமா கம்பெனிகள் வைத்திருக்கின்றன. நீ வருவாய் என படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.