Bigg Boss Tamil Season 8 Day 63 இல் விஜய் சேதுபதி இந்த வாரம் மிக சிறப்பாகவே எபிசோடுகளைக் கொண்டு சென்றார். கேள்விகள் எல்லாம் நச்சு நச்சு என்று நேருக்கு நேராக கேட்டு விட்டார். முதலாவதாக தர்ஷிகாவை எழுப்பி மஞ்சரி தயிறு செய்து சாப்பிடுவதற்காக பால் கேட்ட போது நீங்கள் ஏன் தரவில்லை என்று கேள்வி கேட்டார்.
பிறகு நீங்க ரவா லட்டு செஞ்சி சாப்டீங்க அதெல்லாம் உங்களால செய்ய முடியுது. அவங்க அத்தியாவசிய பொருள அவங்களோட போர்சனை கேக்கும்போது மட்டும் நீங்க ஏன் இப்படி அநியாயமா நடந்துக்குறீங்க என்று கேட்டார். அடுத்ததாக இருட்டுக்கடை திருட்டு பிரியாணி கும்பலை எழுப்பிவிட்டு ஏதோ போன வாரம் லைட்டா சொன்னோம் அப்படிங்கறதுக்காக நீங்க இதுவே செஞ்சிட்டு இருந்தா அது சரி இல்ல.
நீங்க சாப்பிடுங்க சாப்பிட வேண்டாம்னு சொல்லல ஆனா வீட்ல இருக்க எல்லாத்துக்கும் தெரிஞ்சு பண்ணனும் தெரியாம நீங்க பண்ணக்கூடாது அதுவும் இந்த வாரம் நான் ஏன் அழுத்தமா சொல்றேன்னா மத்தவங்க அவங்களோட போர்சன் பொருட்களை கேட்கும்போது நீங்க அவ்வளவு கண்டிஷன் சொல்றீங்க ஆனா உங்களுக்குன்னு வரும்போது மட்டும் அந்த கண்டிஷன் எங்க போயிருது அப்போ நீங்க உங்க இஷ்டத்துக்கு நடப்பீங்களா என்று வச்சு வாங்கி விட்டார் விஜய் சேதுபதி.
சௌந்தர்யாவின் உடல் மொழிகளை வைத்து நன்றாக திட்டி விட்டார். ஜாக்லின் சீ போ போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதையும் இனி செய்யக்கூடாது என்று கூறினார். ஒவ்வொரு வாரமும் இதை சொல்லி கொண்டிருக்கிறோம். நீங்கள் திரும்பத் திரும்ப செயிரீங்க ஏன் கார்டு எதுவும் கொடுக்கணுமா அப்பதான் உங்களுக்கு புரியுமா என்று திட்டிவிட்டார் விஜய் சேதுபதி.
இனிமே எல்லாரும் இவ்வளவு நாள் கடந்துடுச்சு அவங்க இண்டிவிஜுல் கேமா ஒழுங்கா விளையாடனும் பேசுங்க எதுவா இருந்தாலும் உங்க கருத்துக்களை முன்வைங்க எல்லாமே நாகரிகமா இருக்கணும் என்று கூறினார் விஜய் சேதுபதி. இதனால் இனிவரும் ஆட்டமே மாறும் என்று தோன்றுகிறது என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.