இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான், சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 29 ஆண்டுகால மணவாழ்க்கை பிரிவதாக சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு ஆகிய இருவரும் அறிவித்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மனைவியை பிரிந்ததால் ஏற்பட்ட வருத்தத்தில் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஆண்டு இசை உலகில் இருந்து விலகப் போவதாகவும் முழுமையாக அவர் ஓய்வெடுக்கப் போவதாகவும் கூறப்பட்டது. இது குறித்த செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை நிறுத்தவும்,” என்று ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதீஜா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். அதேபோல் ஏ.ஆர். அமீன் அவர்களும், “தயவுசெய்து இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் எங்களிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்,” என்றும், “இசைப்புயலுக்கு ஓய்வு என்பதே கிடையாது,” என்றும், “அவர் ஓய்வெடுக்கப் போகிறார் என்பது முழுக்க முழுக்க பொய்யான தகவல்,” என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து “இசைப்புயல் ஓய்வு எடுக்கப் போகிறார்” என்பது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்பதை உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில், திடீரென ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ’சூர்யா 45’ படத்தில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் விலகிவிட்டதாக கூறப்படுவதும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.