உங்கள் உடைகள் சீக்கிரம் நிறம் வெளுத்து விடுகிறதா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்க…!

நாம் ஒவ்வொருவரும் நமக்கான உடைகள் வாங்கும் பொழுது பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுக்கிறோம். அதேசமயம் அதிக விலை கொடுத்து நாம் விரும்பி வாங்கும் உடைகள் சீக்கிரம் வெளுத்து விட்டால் நம் மனதிற்கு மிகவும் கஷ்டமாக…

clothing 3135444 1280

நாம் ஒவ்வொருவரும் நமக்கான உடைகள் வாங்கும் பொழுது பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுக்கிறோம். அதேசமயம் அதிக விலை கொடுத்து நாம் விரும்பி வாங்கும் உடைகள் சீக்கிரம் வெளுத்து விட்டால் நம் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். சரி..  அப்படி என்றால் உடைகள் சீக்கிரம் நிறம் மாறாமல் தடுப்பது எப்படி? இப்பொழுது பார்ப்போம்.

baby clothes

ஆடைகளை துவைக்கும் பொழுது எப்பொழுதும் உரிய அளவில் தண்ணீர் மற்றும் சோப்பை பயன்படுத்த வேண்டும். அதிகமான வெப்பத்தில் துவைக்கும் பொழுது அல்லது அதிகமாக சோப்பு போட்டு துவைக்கும் பொழுதும் ஆடைகளின் நிறம் மங்கக்கூடும்.

ஆடைகளை காய வைக்கும் பொழுது கடும் வெயிலில் உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். அதிகமான வெப்பம் ஆடைகளின் பொலிவை குறைக்க கூடும். வண்ணத்தையும் பாதிக்கும். அதனால் ஆடைகளை அதிக வெப்பமற்ற இடத்தில் ஊற வைத்து துவைப்பது நல்லது.

baby clothes wash

புதிய ஆடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ள பராமரிப்பு குறிப்புகளை நன்றாக படித்துப் பார்த்து அதையே பின்பற்றுங்கள். அதிலும் விலை அதிகமான ஆடைகளின் பராமரிப்பு குறிப்புகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். குறிப்பிட வெப்பத்தில் அல்லது சோப்பில் துவைக்கப்பட வேண்டியவையாக அவை இருக்கலாம்.

ஆடைகளை துவைக்கும் பொழுது சோப்பு கலந்த நீரில் நீண்ட நேரம் ஊற வைக்கக் கூடாது. அத்துடன் மாசுபட்ட தண்ணீரில் துணிகளை அலசுவதை தவிர்க்க வேண்டும்.

ஆடைகளை துவைக்கும் முன்பு அடர்த்தியான அழுக்கு அல்லது கறைகள் படிந்த இடத்தை முதலில் நன்கு அலசிவிட்டு அதன் பின்னர் ஊற வைத்து துவைக்க வேண்டும்.

dress

எப்பொழுதுமே பழைய ஆடைகளுடன் புதிய ஆடைகளை சேர்த்து துவைக்க வேண்டாம். அதேபோல் குழந்தைகளின் ஆடைகளையும் ஒன்றாக போட்டு துவைக்க கூடாது.

இந்த வழிகளை எல்லாம் பின்பற்றும் போது உங்கள் ஆடைகள் நீண்ட காலம் நிறம் மங்காமல் புதியவையாகவே இருக்கும்.