இந்தியாவில் அதானி நிறுவனம் தான் மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றிருக்கும் நிலையில், அந்த நிறுவனம்தான் இதுவரை எந்த நிறுவனமும் சந்திக்காத சவால்களையும் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அதானி நிறுவனம் மீது குற்றம் சாட்டியிருந்தது. இதனை அடுத்து, அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது.
இந்த நிலையில், ஒரு சில நாட்களில் அதானி அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தார் என்பதும், அதானி நிறுவனத்தின் பங்குகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கடந்த ஆண்டும் இதே போன்ற ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டுகின்ற போது, அந்த சவாலையும் மிக எளிதில் சமாளித்து, அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தாலும், சில நாட்களில் ஏற்றம் கண்டது.
அதேபோல், சோலார் மின்சாரத்தை கொள்முதல் செய்வதில், தமிழ்நாடு உள்பட சில மாநில அரசு அதிகாரிகளுக்கு ரூ.2200 கோடி லஞ்சம் கொடுத்ததாக, அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
இந்த குற்றச்சாட்டில் இருந்து, அதானி நிறுவனம் மீண்டு வரவே முடியாது என்று கூறப்பட்ட நிலையில், அதற்கேற்றார் போல், நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது. ஆனால் ஒரே வாரத்தில், அதானி நிறுவனங்களின் சரிந்த பங்குகள் மீண்டும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதானி முதல் முறையாக மௌனம் கலைத்து கூறிய போது, “இதுபோன்ற சவால்களை நாங்கள் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. இது போன்ற ஒவ்வொரு தாக்குதலும் எங்களை மேலும் வலிமையாக செய்யும். ஒவ்வொரு தடைக்கல்லும், படிக்கலாக மாறுகிறது” என்று கூறியுள்ளார்.