துபாயில் விற்பனை செய்யப்படும் தங்கத்தால் ஆன உணவுகள்… விலையை கேட்டாலே தலை சுற்றுதே!

அதே காலகட்டத்தில் பல்வேறு உணவு வகைகள் கிடைக்கிறது. உலகில் இருக்கும் பல தரப்பட்ட உணவுகளை நம்மால் ருசிக்க முடியும். அதேபோல விலைவாசி உயர்வு அதிகரித்து இருக்கிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கட்டுப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது.…

gold food

அதே காலகட்டத்தில் பல்வேறு உணவு வகைகள் கிடைக்கிறது. உலகில் இருக்கும் பல தரப்பட்ட உணவுகளை நம்மால் ருசிக்க முடியும். அதேபோல விலைவாசி உயர்வு அதிகரித்து இருக்கிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கட்டுப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது. நடுத்தர மக்கள் ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கு கூட இனி மிகவும் சிரமப்பட வேண்டியதாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் துபாயில் தங்கத்தாலே செய்த உணவை விற்பனை செய்து வருகிறார்கள். அதன் விலை எவ்வளவு தெரிஞ்சா தலையே சுற்றிவிடும். அதைப் பற்றி இனி காண்போம்.

துபாயில் அமைந்திருக்கிறது போகோ கஃபே. ந்த கஃபேயை இந்திய வம்சாவழியை சேர்ந்த பெண்ணான சுதேஷா ஷர்மா நடத்தி வருகிறார். இங்கு தான் சுத்த தங்கத்தால் செய்யப்பட்ட உணவுகள் விற்பனையாகி வருகிறது. முதலாவதாக இங்கே மிகவும் பிரபலம் வாய்ந்தது தங்க டீ தான். தயாரிக்கப்பட்ட டீயின் மீது சுத்தமான தங்க இலைகளை போட்டு வெள்ளி கோப்பையில் பரிமாறுகிறார்கள். இந்த டீயின் விலை இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ஆகும்.

தங்க டீ மட்டுமல்ல தங்க தண்ணீர் தாங்க ஐஸ்கிரீம் தங்க க்ராய்சன்ட் என சுத்த தங்கம் சேர்க்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. விலையும் அதற்கு தகுந்தவாறு போல் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் தான் இருக்கிறது.

இதைப்பற்றி அந்த போகோ கஃபேயின் உரிமையாளரான சுதேஷா சர்மா கூறும் போது நாங்கள் எல்லா வகையான உணவுகளை விற்பனை செய்து வருகிறோம். மிக குறைந்த விலையில் இருந்து அதிகபட்ச விலை வரை உணவுகள் இருக்கிறது. நீங்கள் எந்த மெனு வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் உணவிலேயே ஆராய்ந்து ரசித்து தனித்துவமாக சாப்பிட வேண்டும் என்று விரும்புற்களுகாக தான் இந்த தங்கத்தால் செய்யப்பட்ட உணவுகளை நாங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம் என்று கூறுகிறார்.

துபாயை சேர்ந்த உணவு ரிவியூ செய்யும் நபர் இந்த தங்கத்தால் ஆன டீ யை பற்றி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்னடா இது இந்த டீ சாப்பிடணும்னா ஈஎம்ஐ கட்டி தான் சாப்பிடணும் போல இருக்கு என்று கலாய்த்து வருகின்றனர்.