இந்தப் படமெல்லாம் தேவாவுக்கு நடிக்க வந்த வாய்ப்பா? இருந்தும் நோ சொல்லிய காரணம்

By John A

Published:

தமிழ் சினிமாவில் 90களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஒருபுறம் கலக்கிக் கொண்டிருக்க, இருவருக்கும் மத்தியில் புது ரூட்டைப் பிடித்து சோலோவாக பயணித்துக் கொண்டிருந்தவர் தான் இசையமைப்பாளர் தேவா. வைகாசி பொறந்தாச்சு படத்திற்கு முன்னரே அறிமுகம் ஆனாலும், இப்படம் தான் அவருக்கு ஹிட் கொடுத்தது.

தொடர்ந்து சூரியன், அண்ணாமலை என வரிசையாக ஹிட் கொடுத்த தேவா பாட்ஷா படத்தில் உச்சம் தொட்டார். பாட்ஷா படத்தின் வெற்றி அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவாவை பிஸியாக வைத்திருந்தது. குறிப்பாக பிரசாந்த், விஜய், அஜீத்திற்கு தேவாவின் இசையே பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தது. இதனால் தேவாவை ரசிகர்கள் தேனிசைத் தென்றல் என்ற பட்டம் கொடுத்துக் கொண்டாடினர்.

தொடர்ந்து தனது இசையால் பல படங்களை வெற்றிபெறச் செய்த தேவா 2005-க்குப் பின் வித்யாசாகர், அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா, பரத்வாஜ் போன்றோரின் வருகையால் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் 90-களின் ஹிட்ஸ்களில் பெரும்பாலும் தேவாவிற்கென்று தனி ஆல்பமே இருக்கும்.

300 ஆண்டுகள் அதிசயம்… இங்கேயும் ஒரு கங்கை… வந்தது எப்படின்னு தெரியுமா?

மேலும் கானா பாடல்களை திரையிசையில் அறிமுகப்படுத்தி பல ஹிட் பாடல்களை பாடியும் இருக்கிறார் தேவா. இந்நிலையில் இசைத்துறையில் பல சாதனைகளைப் படைத்த தேவாவை படங்களில் நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக சமீபத்தில் வந்த ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரம், மூக்குத்தி அம்மன், எல்.கே.ஜி. ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் தேவாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்திருக்கிறது. ஆனால் நடிக்க தேவா மறுத்திருக்கிறார். ஏனெனில் இசையில் பல அற்புதங்களை நிகழ்த்தும் தேவாவிற்கு வசனங்களைப் பேசி நடிப்பது மட்டும் வரவில்லையாம். மேலும் மனனம் செய்து அந்த வசனங்களைப் பேசி நடிப்பது தேவாவிற்கு சவாலாக இருந்திருக்கிறது. எனவே திரைப்படங்களில் நடிக்க வந்த வாய்ப்பினை நாகரீகமாகப் பேசி நிராகரித்திருக்கிறார் தேனிசைத் தென்றல்.