பெயருக்குத்தான் பழைய சோறு.. உடலை புத்துணர்வு பெறச் செய்யும் பழைய சாதத்தின் மகிமைகள்

By John A

Published:

நம் வீட்டில் தினமும் மிச்சமான சாப்பாட்டினை இரவில் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அதனுடன் சிறிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் அதனுடன் தயிர், மோர் கலந்து சாப்பிடுவோம். பெரும்பாலானோருக்கு இந்த பழைய சோற்றின் மகிமையைப் பற்றித் தெரிவதில்லை.

ஆனால் கிராமத்து மனிதர்களுக்கும், வியர்வை சிந்தி உழைப்பவர்களுக்கும் தெரியும் இதன் அருமை. இந்த பழைய சாதம் இப்போது ஆன்லைனிலும் கிடைக்கிறது. வெளிநாடுகளில் பழைய சோற்றின் மகத்துவத்தை அறிந்து அதனை இப்போது விற்பனை செய்து வருகிறார்கள்.

இப்படி பழைய சாதம் நம் உடலுக்குப் பல வகைகளில் நன்மை அளிக்கிறது. பழைய சாதத்தில் எந்த உணவுப் பொருளிலும் கிடைக்காத வகையில் வைட்டமின் பி சத்துக்கள் நிரம்பியுள்ளது. பழைய சோற்றில் லட்சக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாவதால் அதனை உண்ணும் போது செரிமானப் பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. ஊற வைத்த பழைய சோற்றில் நோய் எதிர்ப்புக் காரணிகள் அதிகம் உள்ளதால் உடலை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.

தினமும் ஸ்வீட் சாப்பிட்டும்.. 15 மாசத்துல 11 கிலோ குறைஞ்ச பெண்.. சீக்ரெட் தெரிஞ்சு மிரண்டு போன நெட்டிசன்கள்..

உடல் சூட்டினைத் தணிப்பதில் பழைய சோற்றுக்கு நிகர் ஏதும் இல்லை. காலையில் பழைய சோற்றினை சாப்பிடும் போது வயிறு தொடர்பான நோய்களை நீக்குவதுடன் உடல் சூட்டையும் தணிக்கும். இரத்த அழுத்தத்தை பேணிக் காக்கும். உயர் இரத்த அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீராக்கும் ஆற்றல் பழைய சாதத்திற்கு உண்டு. ஒவ்வாமைப் பிரச்சினைகளையும் பழைய சோறு நீக்கும். மூளை செல்களைத் தூண்டும் ஆற்றல் பழைய சோற்றுக்கு உண்டு.

நாகரீகம் கருதி இன்று இந்த தேவாமிர்தத்தை ஒதுக்கி வருகிறோம். ஆனால் இதன் அருமை தெரிந்தவர்கள் இன்றளவும் அடிக்கடி உண்டு உடல் ஆரோக்கியத்தைப் பேணி வருகிறார்கள்.