பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக தற்போது எலட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஆட்டோமொபைல் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஜீரோ மாசுபாடு, பெட்ரோல் செலவு மிச்சம், சத்தமின்மை, குறைவான பராமரிப்பு, குறைந்த பட்ச மின் நுகர்வு போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பலரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். எனினும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையைப் பொறுத்தவரை சற்று கூடுதலாகவே இருக்கிறது.
ஆனால் இனி எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விலையைப் பற்றி கவலையே படத் தேவையில்லை. ஏனெனில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் ஓலா நிறுவனம் தற்போது ரூ. 40,000 முதல் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான புக்கிங் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும்.
இந்த வாகனத்தில்அப்படி என்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?
ஓலா நிறுவனம் தற்போது 4 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முறையே ஓலா கிக் ரூ. 39,999-க்கும், கிக் பிளஸ் ரூ. 49,999-க்கும், எஸ் 1 இசட் வகைகள் 59,999-க்கும் மற்றும் எஸ் 1 இசட் பிளஸ் 64,999-க்கும் புக்கிங் நடைபெறுகிறது. வழக்கமாக ரூ. 1லட்சத்திற்கு மேல் ஓலா பைக்குகளின் விலைகள் இருக்க இந்த மாடல்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு கோடி ரூபாய் சேர்க்க மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும்? எஸ்.ஐ.பி ரகசியங்கள்..!
குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களையும், அருகாமையில் இருக்கும் அலுவலகம் சென்று வருபவர்களுக்கும் ஓலா கிக் மாடல் செம பட்ஜெட் வாகனம் ஆகும். இதனை ஒருமுறை ஃபுல் சார்ஜ் ஏற்றி பயணிக்கும் போது சுமார் 112 கி.மீ வரை செல்லாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓலா கிக் மாடலில் மணிக்கு சுமார் 25கி.மீ வேகத்திலும், கிக் பிளஸ் வாகனத்தில் சுமார் 45 கி.மீ. வேகத்திலும் பயணிக்கலாம். ஓலா ஸ்கூட்டர்களில் அடிக்கடி பழுதாகும் என்ற குறைபாடுகள் இருந்தன. தற்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு சாலைகளில் ஓலா வாகனங்கள் தங்கு தடையின்றி ஓடுவதால் வாகன ஓட்டிகள் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மாறி வருகின்றனர்.