கேரளாவில் உள்ள ஐஸ்கிரீம் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் செய்த தவறு காரணமாக, அந்த பேக்ட்ரியை சுகாதாரத் துறை அதிகாரிகள் மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவுத்துறை அதிகாரிகள் தற்போது தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரிக்காத நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் பேக்கிங் செய்யும் முன் ஐஸ்கிரீமை நக்கி, பின்னர் பேக்கிங் செய்துள்ளார். இதை தற்செயலாக ஐஸ்கிரீம் வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்து, வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
அந்த வீடியோ மிக விரைவில் வைரலானதால், வாடிக்கையாளர்கள் கடுமையாக கொந்தளித்தனர். சமூக வலைதளங்களில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்ததால், காவல்துறை சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் ஃபேக்டரிக்கு சென்று விசாரணை நடத்தியது. விசாரணையின் போது, அந்த ஊழியர் தனது தவறை ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து, அந்த ஐஸ்கிரீம் ஃபேக்டரி சுகாதாரத் துறையால் மூடப்பட்டது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://x.com/TimesYug/status/1859874594762674595