Bigg Boss Tamil Season 8 Day 44 இல் பிக் பாஸின் புதிய டாஸ்க் ஆரம்பிப்பதுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அதனால் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் பெட்ரூமுக்குள் க்ளோஸ் செய்து பிக் பாஸ் வைத்திருந்தார். இந்த நேரத்தில் இரண்டு அணிகளுமே சேட்டை செய்து விளையாடிக் கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக ரானவ் பவித்ராவை காதல் செய்வது போன்ற கண்டன்ட்டை எடுத்து அவரை எரிச்சல் ஊட்டுகிறார் என்று சொல்ல வேண்டும். பவித்ரா வேண்டாம் என்று சொல்லியும் பின்னாடியே போவது எதையாவது செய்வது என்று இரிடேட் பண்ணிக் கொண்டே இருந்தார். அதேபோல பெட் ரூமில் உள்ளே இருக்கும்போது பவித்ராவுக்கு தண்ணி கொடுக்கிறேன் என்று கோட்டை தாண்டி விதியை மீறி விட்டார். அருண் பேச்சுக்காக சொன்னார் ஆனால் ரானவ் உடனே கோட்டை தாண்டி வந்து விட்டார்.
இதனால் வீட்டின் கேப்டன் ஆன மஞ்சரிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. எப்படி நீங்கள் ரூல் பிரேக் செய்து எப்படி வரலாம் அருண் சொன்னா நீங்க வந்துடுவீங்களா இன்று சண்டை ஆரம்பித்துவிட்டது. அருணுக்கும் கோபம் வந்து பேசி விட்டார். எல்லாரும் விளையாட்டுத்தனமா Fun ஆ போகும்போது நீங்கதான் இப்ப வித்தியாசமா கொண்டு போறீங்க மஞ்சரி என்று பெரிய சலசலப்பு ஏற்பட்டு விட்டது.
அடுத்ததாக நாமினேஷன் ப்ரீ பாஸ்க்கான டாஸ்க் ஆக்டிவிட்டி ஏரியாவில் வைத்திருந்தார் பிக் பாஸ். குவளையை தலைகீழாக வைத்து அதில் கோலியை சுற்றிக்கொண்டு எதிரில் இருக்கும் பவுலில் போட வேண்டும். இந்த டாஸ்கில் ஆண்கள் அணி பெண்கள் அணியை விட ஒரு பாய்ண்ட் அதிகமாக எடுத்து வெற்றி பெற்று விட்டனர்.
அதற்கு அடுத்ததாக கடந்த வாரம் அருணுக்கு எப்படி கேபி்னில் இருக்கிற ஸ்டிரிங்கை எடுத்தால் பதவி போயவிடும் என்று சொல்லப்பட்டதோ அதேபோல் மஞ்சரிக்கு மூன்று பேட்ஜ்க்களை அனுப்பிய பிக் பாஸ் ஏதாவது ஒரு வேலிட்டான காரணம் இருந்தால் ஒவ்வொரு பேட்ஜாக கழட்டலாம் மூன்றும் போய் விட்டால் அவரது கேப்டன் பதவி போய்விடும் என்று கூறினார். இப்படி முத்துக்குமார் பெட்ரூமில் நடந்த சலசலப்பு காரணமாக கூறி ஒரு பேட்ஜை எடுத்து விட்டார்.
இரண்டாவது பேட்ஜை எடுப்பதற்கு சாச்சனா ராணவை வைத்து ஒரு காரணத்தை கூறினார். ஆனால் முந்தைய நாள் கிராசரி விஷயத்தில் மஞ்சரி சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு பர்சனலாக அட்டாக் செய்வது போல தான் இருந்தது. அடுத்ததாக ஜெஃப்ரி எழுந்து வந்து மஞ்சரிக்கு ஆதரவாக பேசினார் வாய்ப்பு கொடுங்க அவங்களுக்கு வந்த உடனே எடுக்காதீங்க என்று பேசியது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. இதனால் மஞ்சரி மனமடைந்து அழுது விட்டார்.