Bigg Boss Tamil Season 8 Day 43: இடம் மாறிய அணிகளால் ஆட்டம் மாறியது… சாச்சனாவை குற்றஞ்சாட்டிய பெண்கள் அணி!

Bigg Boss Tamil Season 8 Day 43 இல் பெண்கள் அணியும் ஆண்கள் அணியும் இடம் மாறினர். ஆண்கள் பெண்கள் இடத்திற்கும் பெண்கள் ஆண்கள் இடத்திற்கும் மாறிவிட்டனர். இனி தான் ஆட்டமே மாறப்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 43 இல் பெண்கள் அணியும் ஆண்கள் அணியும் இடம் மாறினர். ஆண்கள் பெண்கள் இடத்திற்கும் பெண்கள் ஆண்கள் இடத்திற்கும் மாறிவிட்டனர். இனி தான் ஆட்டமே மாறப் போகிறது என்று தோன்றியது. ஏனென்றால் கிச்சன் ஏரியாவுக்கு வருவதற்கு ஆண்கள் தான் பெண்களுக்கு டாஸ்க்களை கொடுத்து வந்தனர். இப்போது இடம் மாறிவிட்டதால் பெண்கள் சொல்லும் அனைத்து டாஸ்க்களையும் ஆண்கள் செய்ய வேண்டும்.

bigg boss 2024 11 19T204549.593

முதல் நாளே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. மஞ்சரி ஒரு டாஸ்கை முத்துக்குமாருக்கு கொடுத்தார் எப்படி கொடுக்கலாம் என்று அருண் கேட்டார். இதுவே பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. அதற்கடுத்ததாக Capitancy டாஸ்க் நடைபெற்றது. லெமன் இன் தி ஸ்பூன் டாஸ்க் கொடுத்திருந்தார் பிக் பாஸ்.

யார் அதிக நேரம் இந்த லெமன் கீழே விழாமல் ஸ்பூனில் வைத்து வாயில் வைத்துக்கொண்டு நடந்து கொண்டே இருக்கிறார் என்பதுதான் டாஸ்க். இந்த டாஸ்கில் வெற்றி பெற்ற மஞ்சரி இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராக ஆனார். மஞ்சரி தலைவர் ஆன பிறகு யார் கிச்சன் பொறுப்பு மற்ற பொறுப்புகள் என்னென்ன என்பதை பிளாஸ்மா டிவி முன்னாடி வந்து நின்று கூறினார்.

அடுத்ததாக நாமினேஷன் பிராசஸ் நடந்தது. ராயினும் அன்சிதாவும் நேரடி நாமினேஷன் ஆக முத்துக்குமாரையும் ஜாக்குலினையும் கூறினர். அடுத்ததாக இந்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகி இருப்பவர்கள் சௌந்தர்யா தர்ஷிகா பவித்ரா சாச்சனா சிவகுமார் விஷால் ஆகிய முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

அதற்கு அடுத்ததாக ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது. அதற்காக ஒரு டாஸ்கை வைத்து பாயிண்ட்ஸ்களை முடிவு செய்தனர். ஷாப்பிங் டாஸ்க் சென்றபோது ஆண்கள் அவர்கள் கொடுக்கப்பட்ட பிபி கரன்சிக்குள்ளாகவே டாஸ்கை முடித்துவிட்டு வெற்றிகரமாக வந்துவிட்டனர். ஒரு 100 பாயிண்ட் கூட எடுத்திருந்தாலும் பிக் பாஸ் மன்னித்து விட்டு விட்டார்.

ஆனால் பெண்கள் 1200 பாயின்ட் அதிகமாக ஷாப்பிங் செய்ததால் அவர்களுக்கு அத்தியாவசிய பொருள் மட்டுமே பிக் பாஸ் அனுப்புவது மட்டுமே கிடைக்கும். இதனால் பெண்கள் அணியில் சலசலப்பு ஏற்பட்டது. ஷாப்பிங் சென்ற சாச்சனாவை மஞ்சரி உங்களுக்கு ஆசை இருக்கலாம் ஆனால் இது பொறுப்புடன் செயல்பட வேண்டிய டாஸ்க் என்று கூறினார்.

சாச்சனா அவர்கள் சொல்வது போல அதிகப்படியான பிரட் பாக்கெட்டுகளையும் ஜாம் பாட்டில்களையும் எடுத்ததுதான் காரணம். அதனால் தான் பாயிண்ட் கூடிவிட்டது என்று கூறுகின்றனர். ன்சிதா பவித்ரா முதலானோர் ஆண்கள் அணி எப்படி அத்தியாவசிய தேவைகளை பிளான் செய்து சாப்பிடுகிறார்கள் நாம் Luxury காக எடுத்துதான் மாட்டிக் கொள்கிறோம். அத்தியாவசியமாக இந்த வீட்டில் வாழ்வதற்கு என்ன தேவையோ அதைத்தான் நாம் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

bigg boss 2024 11 19T204624.195

அன்ஷிதா நீ ஒரு பிரட்டுக்கு இவ்வளவு ஜாம தடவி சாப்பிடற சாட்சனா இது நல்லது கிடையாது உன் உடம்புக்கும் நல்லது கிடையாது நான் சொல்றேன் என்று சொன்னவுடனே சாட்சினாவுக்கும் மிகவும் மன வருத்தமாகி இன்னொரு பக்கம் சௌந்தர்யாவிடம் சொல்லி அழுகிறார் நான் என்ன தப்பு செஞ்ச எல்லாரும் என்னையே சொல்றாங்க என்று கதறி கதறி அழுகிறார். ஆனால் உண்மையில் சாச்சனா பொறுப்பில்லாமல் விளையாடுவது போல் தான் தோன்றுகிறது.