Bigg Boss Tamil Season 8 Day 42 வில் விஜய் சேதுபதி பள்ளிக்கூடம் டாஸ்க் ஈகோவை வைத்துவிட்டு விளையாடினீர்களா என்று ஒவ்வொருவராக கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறினார்கள். ஆனால் ஆடியன்ஸிடம் கேட்ட பொழுது ஈகோ வைத்து விளையாடியது போல் தான் இருந்தது என்று கூறினார்கள்.
அதனால் விஜய் சேதுபதி ஹவுஸ் மேட்ச் இடம் எடுத்துக் கூறி உங்கள் பர்சனல் ஈகோவை நீங்கள் காட்டாதீர்கள் விளையாட்டை விளையாட்டாக விளையாடுங்கள் எப்படி சுவாரசியப்படுத்தலாம் என்று பாருங்கள் நீங்கள் இப்படி மாறிமாறி ஈகோ காட்டிக்கொண்டு அடித்துக் கொண்டிருந்தால் எங்களுக்கு பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை என்று கூறினார்.
அடுத்ததாக ராயனுக்கு சௌந்தர்யா குரலாக இருந்து பல இடத்தில் பேசுகிறார் என்ன காரணம் என்று விசாரித்தார். ராயனை நன்றாக பேசிவிட்டார் விஜய் சேதுபதி. இனிமேல் இந்த மாதிரி நடந்து கொண்டால் உங்களிடம் நான் கேள்வியை கேட்க மாட்டேன் யார் என்ன கேள்வி கேட்டாலும் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் பேசுவதற்கு இன்ட்ரஸ்ட் இல்லை என்பது போல் முக பாவங்களை காட்டக்கூடாது என்று கூறினார்.
அடுத்ததாக சௌந்தர்யாவை தான் விஜய் சேதுபதி வச்சு செய்து விட்டார் என்று கூறவேண்டும். ஒவ்வொருவர் பேசும்போது சௌந்தர்யா வெவ்வேறு முகபாவனை கொடுப்பார். அது அவருடைய சுபாவம் என்று கூறுகிறார். ஆனால் விஜய் சேதுபதியோ அது தவறு ஒருத்தரு ஒரு கருத்தை கூறும் போது இப்படி முக பாவனைகளை சொல்லக்கூடாது அது ஒவ்வொருத்தரையும் இன்சல்ட் செய்வது போல் இருக்கும் என்று வெகு நேரம் சௌந்தர்யாவுக்கு தான் சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் மனமடைந்த சௌந்தர்யா பாத்ரூமில் போய் அழுது கொண்டிருந்தார்.
அடுத்ததாக eviction ப்ராசஸ் நடந்தது. யாரும் எதிர்பாராவிதமாக ரியா ஏவிக்ட் ஆனார். உள்ளே ஒரு வேலையும் செய்யாமல் பலர் இருக்கும் போது ஏன் ரியா வெளியே சென்றார் என்று தெரியவில்லை. மிகவும் மனமடைந்து விட்டார் ரியா. நான் இதற்கு தகுதியானவள் இல்லை. நான் நன்றாக தான் விளையாடினேன் மற்றவர்களைப் போல் பி ஆர் ஏதும் இல்லாமல் சுயமாக ஒரு நிமிடம் கூட உட்காராமல் இரண்டு வாரம் நான் விளையாடினேன் என்னை ஏன் evict பண்ணாங்கன்னு எனக்கு தெரியல என்று கடைசி நொடி வரை கண்கலங்கி கொண்டே இருந்தார் ரியா.
அதை பார்த்த பார்வையாளருக்கு மிகவும் மனசு கஷ்டமாக போய்விட்டது. விஜய் சேதுபதியாலும் பேசவே முடியவில்லை. ரியாவுக்கு ஆறுதல் கூறி அனுப்பினார். இறுதியாக housemates இடம் சுவாரசியமாக விளையாட்டை கொண்டு போங்கள் என்று சொன்னதுடன் எபிசோட் முடிந்தது.