பொழுதுபோக்கு

நடிகர் பாலாஜியை அடிக்கப் பாய்ந்த ஆட்டோ டிரைவர்.. பரபரப்பான படக்குழு நடந்தது என்ன?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானாவர் பாலாஜி முருகதாஸ். தேனியைச் சேர்ந்த பாலாஜி முருகதாஸ் வளர்ந்தது எல்லாமே சென்னைதான். கடந்த 2017-ல் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்த பாலாஜி அதில் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ரன்னராகத் தேர்வானார். இவருக்கு அந்த சீசனில் ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபெற்று வின்னர் ஆனார். இதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

அதன்படி, டைசன் என்ற ஒரு படத்தில் ஒப்பந்தமான பாலாஜி முருகதாஸ் அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இதனையடுத்து தற்போது சதீஷ்குமார் இயக்கத்தில் Fire என்ற படத்தில் நடித்திருக்கிறார் பாலாஜி முருகதாஸ். இப்படத்தில் அவருடன் ரக்ஷிதா, சிங்கம்புலி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்களை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட நாகர்கோவில் காசியின் கதாபாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் இப்படத்தில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் 8: சவுந்தர்யாவ பாத்து கத்துக்கிட்டீங்களா?.. மூஞ்சுக்கு நேராக கேள்வி கேட்ட விஜய் சேதுபதி.. திணறிய ஆனந்தி..

இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. யூடியூப்பில் FIRE படத்தின் டிரைலர் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் பிரத்யேக காட்சியினை தூய்மைப் பணியாளர்களுக்கும், பெண் ஆட்டோ டிரைவர்களுக்கும் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தினைப் பார்த்து முடித்தவுடன் வெளியே வந்த பெண் ஆட்டோ டிரைவர் பாலாஜி முருகதாஸை பார்த்து உன்னைப் பார்த்தா எனக்கு அடிக்கணும் போலத் தோணுது என்று கூறிக்கொண்டே ஆத்திரத்தில் அவர் சட்டையைப் பிடித்தார்.

சுற்றி படக்குழுவினர் பலரும் நின்றிருந்தனர். ஒருவழியாக அப்பெண்ணைச் சமாதானப்படுத்தினர். பாலாஜியை அடிக்கப் பாய்ந்த ஆட்டோ டிரைவரின் வைரல் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்குப் படம் ஒன்றைப் பார்த்துவிட்டு ரசிகை ஒருவர் வில்லனை அடித்த சம்பவம் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது..

 

Avatar photo
John A

ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.