தவறான தகவல்.. விக்கிபீடியா மீது இந்தியாவில் வழக்குப்பதிவு.. பெரும் பரபரப்பு.!

By Bala Siva

Published:

விக்கிப்பீடியா இணையதளத்தில் தவறான மற்றும் அவதூறான தகவல்கள் பதிவு செய்யப்படுவதால், விக்கிப்பீடியா நிறுவனம் இடைத்தரகரா என்ற கேள்வியை எழுப்பி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், விக்கிப்பீடியா என்றால் விவரமாக தெரிந்து கொள்ளலாம் என்று மக்கள் நம்பும் நிலையில், விக்கிப்பீடியா இணையதள பக்கத்தில் தலைவர்கள் வரலாற்று சம்பவங்கள் ஆகியவை தவறாக இருப்பதாக சில நேரங்களில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், விக்கிப்பீடியாவில் தவறான மற்றும் அவதூறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாக இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், விக்கிப்பீடியா இணையதளத்தில் உள்ள தகவல்களை ஒரு தனிப்பட்ட குழு கட்டுப்படுத்துகிறது என மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், சில கேள்விகளை விக்கிப்பீடியா நிறுவனத்திற்கு எழுப்பி உள்ள மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், அந்த நோட்டீஸில் விக்கிப்பீடியாவின் தகவல்களில் சார்பு மற்றும் தவறான தகவல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விக்கிப்பீடியா என்பது ஒரு வெளியீட்டு நிறுவனமா அல்லது இடைத்தரகரா? அந்த நிறுவனத்தை வெளியீட்டு நிறுவனமாக ஏன் கருதக்கூடாது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.