நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் ஒவ்வொரு வகையான உணவுப் பொருட்கள் பயன் தரக்கூடியவையாக உள்ளன. ஆனால் உச்சியிலிருந்து பாதம் வரை ஒட்டுமொத்தமாகச் சேர்த்து ஒப்பற்ற பலன் தரக்கூடிய உணவுப்பொருள் எதுவென்றால் அது பொன்னாங்கண்ணி கீரைதான்.
பெயரிலேயே பொன் கொண்டிருப்பதால் பொன் போல் உடல் நலனைப் பாதுகாக்கிறது. பொதுவாக கீரைகள் உடலின் இயக்க சக்திக்கு அதிக பயன் தரக்கூடியது. அதேபோல் தான் பொன்னாங்கண்ணி கீரையும் பலவித நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
பொன்னாங்கண்ணி கீரையை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் கண் சம்பந்தமான அனைத்து குறைகளுக்கும் தீர்வு காணலாம். பளிச்சென கண்பார்வை கிடைக்க பொன்னாங்கண்ணி மிகுந்த பங்கு வகிக்கிறது.
பொன்னாங்கண்ணி ஜுஸ் குடிக்கும் போது ஆஸ்துமாவிற்கு மிகச்சிறந்த இயற்கை மருந்தாக அமைகிறது. பொன்னாங்கண்ணி கீரை கல்லீரலைப் பராமரிப்பதில் மிகுந்த பங்கு வகிக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் மதிய உணவுடன் சிறிதளவு பொன்னாங்கண்ணி கீரையும் சாப்பிட நல்ல பலன் தரும். பொன்னாங்கண்ணி கீரையில் பச்சை, சிவப்பு என இரு வகைகள் உண்டு. இரண்டுமே உணவுக்கு ஏற்றது தான். உடல் மினுமினுப்பாக இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் போதும் உடல் தானாகவே பொலிவு பெறும். இரத்ததினைச் சுத்திகரித்து உடல் புத்துணர்ச்சிக்கும் உதவுகிறது பொன்னாங்கண்ணி கீரை.
இனி போட்டோஷாப் தேவையில்லை. ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய செயலி..!
பொன்னாங்கண்ணி கீரையை உடல் குறைய, உடல் எடை அதிகரிக்க என இரண்டுக்குமே பயன்படுத்தலாம். உடல் எடை குறைய கீரையுடன் சிறிதளவு உப்பு, மிளகு சாப்பிட்டு வர உடல் எடை குறையும். உடல் எடை அதிகரிக்க இக்கீரையுடன் பாசிபருப்பு, துவரம்பருப்பு, நெய் சேர்த்து சாப்பிட்டால் எலும்புகள் உறுதியாக உடல் எடை அதிகரிக்கும்.
இருதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் பொன்னாங்கண்ணி கீரையின் பங்கு அதிகம். இப்படி உச்சந்தலை முதல் பாதம் வரை உடலின் அனைத்து இயக்கத்திற்கும் ஒப்பற்ற மருந்தாக பொன்னாங்கண்ணி கீரை விளங்குகிறது. இதனால் தான் இக்கீரையை கீரைகளின் ராணி என்று அழைக்கிறோம்.