கந்த சஷ்டி 4ம் நாள்: கடன்பிரச்சனை தீரணுமா? இந்த 2 பொருள்களை மட்டும் தானம் பண்ணுங்க…!

கந்த சஷ்டி விரதத்தின் 4வது நாள் 5.11.2024 (செவ்வாய்க்கிழமை) வருகிறது. இது ரொம்ப விசேஷமான நாள். இன்று கடன் தான் பலருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. கடைசியில் கடனை எப்படி அடைப்பதுன்னு தெரியாமலேயே பலரும்…

lord muruga

கந்த சஷ்டி விரதத்தின் 4வது நாள் 5.11.2024 (செவ்வாய்க்கிழமை) வருகிறது. இது ரொம்ப விசேஷமான நாள். இன்று கடன் தான் பலருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. கடைசியில் கடனை எப்படி அடைப்பதுன்னு தெரியாமலேயே பலரும் புலம்பித் தவிக்கிறாங்க.

நமது தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கடன் வாங்குவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. அத்தியாவசியத் தேவைக்கு வாங்கலாம். அந்தக் கடனை அடைப்பதற்கு முருகப்பெருமானை இந்த நாளில் வழிபடலாம்.

சற்கோண தீபத்தில் ‘சரவணபவ’ என்ற மந்திரத்தின் 4ம் எழுத்தாக இன்று ‘ண’ வில் தீபம் வைக்கலாம். 4 தீபம் இன்று ஏற்ற வேண்டும். காலை, மாலை ஏற்றலாம். இன்று நைவேத்தியமாக புதினா சாதம் செய்யலாம். இதைத் தானம் பண்ணினால் இன்னும் பலன்கள் நிறைய கிடைக்கும். இன்று ஒரு நாலு ஜீவராசிக்குத் தானம் பண்ண வேண்டும்.

‘நாலு பேருக்காவது தானம் செய்யுங்க’ன்னு நம்ம பெரியவங்க சொல்வாங்க. நாலு ஜீவராசி எதுன்னு பார்க்கலாமா… பசுவுக்குத் தானம் செய்யலாம். நல்ல கீரை, பழம், அரிசியில் வெல்லம் கலந்து தானம் கொடுக்கலாம். சாப்பிட்ட எச்சியையும், மீதம் உள்ளதையும் போடாதீங்க.

ghee viboothi
ghee viboothi

அடுத்து காகம், நாய், கோழி, புறா போன்ற பறவைகளுக்குத் தானம் கொடுக்கலாம். பூனைக்கும் தானம் கொடுக்கலாம். காகத்திற்கு மிக்சர், சப்பாத்தி, சாதம் என என்ன நம்மிடம் இருக்கோ அதைத் தானமாகக் கொடுக்கலாம். இப்படித் தானம் செய்கையில் நமது கடனை நிச்சயம் முருகப்பெருமான் அடைவதற்கு உண்டான செல்வ வளத்தைத் தருவார்.

பிறவிக்கடனையும், பிறரிடம் வாங்கிய கடனையும் தொலைத்து விட வேண்டும். அதற்கு ஒரே வழி முருகப்பெருமானின் திருவடி தான். அருணகிரி நாதர் விண்ணப்பம் செய்த அழகான திருச்செந்தூர் திருப்பதிகமான ‘நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்’ என்ற பாடலைப் பாராயணம் செய்து வழிபடலாம்.

அதே போல 4 வரி பதிகமாக ‘மாலோன் மருகனை’ என்று தொடங்கும் பாடலையும் பாராயணம் செய்யலாம். மாலோன், மயிலோன் ஆகியோரைப் பாடினால் நமக்கு லோனே இல்லாமல் போயிடும். அருணகிரி நாதர் இருவரையும் வைத்துத் தான் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

முருகனைப் பார்க்கப் பார்க்க நமக்கு எவ்வளவு ஆனந்தம். ‘எங்கிருந்து தான் அவருக்கு அவ்வளவு அழகு வருகிறது? அவரைக் காண எனக்கு ரெண்டு கண்ணை மட்டும் கொடுத்துள்ளாயே… இது போதுமா…’ன்னு அருணகிரிநாதர் அழகாகக் கேட்கிறார். விபூதியைத் தானமாகக் கொடுத்தால் ரொம்பவே நல்லது. அதே போல நெய் தானம் பண்ணினால் கடன் பிரச்சனை தீரும்.

நாலு பாக்கெட் விபூதியை வாங்கிட்டுப் போய் கோவிலுக்குச் சென்று யாராவது நாலு பேருக்குக் கொடுக்கலாம். நல்ல நெய்யாகப் பார்த்து அதே போல யாருக்காவது கொடுங்க. பிறருக்குக் கொடுக்க வழியில்லாதவர்கள் கோயிலுக்காவது கொடுங்க. இந்த நாளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வழிபட வேண்டும்.

மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் தானம் செய்து விட வேண்டும். விரதம் இருப்பவர்கள் தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள். உடலைச் சோர்வடையச் செய்து விடாதீர்கள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.