புதுக்கோட்டையைச் சேர்ந்த நிதிஷ் சேர்ந்தவர் சொந்த ஊருக்கு சென்ற போது ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு வந்தவர் என்றும், அந்த மாநாட்டு பந்தலை ரயிலில் இருந்து பார்த்தபோது கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் தவறான செய்தி பரவி வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விக்கிரவாண்டி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மாநாட்டு பந்தலை பார்த்ததும் ஆர்வ மிகுதியால் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் ரயிலில் இருந்த போது கீழே விழுந்ததாகவும் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் இந்த தகவல் தவறானது; அவர் சொந்த ஊருக்கு சென்றபோது தான் ரயிலில் இருந்து தவறி விழுந்தார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் உயிரிழக்கவில்லை என்றும், தற்போது அவர் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு வந்தவர் ரயிலில் தவறி உயிரிழந்தார் என்ற செய்தி உண்மையல்ல என்பது ரயில்வே அதிகாரிகள் மூலம் தெரியவந்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
