மகனையேக் கொன்ற தாய்…! தீபாவளி தோன்றிய வரலாற்றுக்குப் பின்னால் இப்படி ஒரு தியாகக் கதையா?

By Sankar Velu

Published:

ஐப்பசி மாதம் என்றாலே அடை மழை என்பார்கள். ஆனால் அதில் இன்னொரு சிறப்பும் உண்டு. அதுதான் தீபாவளி. அந்த வகையில் வரும் அக்டோபர் 31ல் வியாழக்கிழமை அன்று தீபாவளிப்பண்டிகை வருகிறது.

புத்தாடைகள் உடுத்தி இனிப்பு சாப்பிட்டு பட்டாசு வெடித்து என அனைவரும் குதூகலமாகக் கொண்டாடுவர். போனஸ் வேறு கைநிறைய வாங்கி இருப்பதால் அவர்களுக்கு தீபாவளி என்றாலே இரட்டிப்பு மகிழ்ச்சியாகி விடும். அந்த அற்புதமான நாள் எப்படி தோன்றியதுன்னு பார்க்கலாமா…

நரகாசுரன் இறந்த நாளைத் தான் மகிழ்ச்சிகரமான தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடி வருகிறோம். தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தம். இந்த தீபாவளி என்ற பெயர் எப்படி வந்தது என்று கேட்டால் அதற்குப் பதில் ஆச்சரியமாக இருக்கும். ஏன்னா பல கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இது. வாங்க பார்க்கலாம்.

நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை இடைவிடாது கொடுத்துக் கொண்டே இருந்தான். இதனால் அவர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டனர். இதை அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.

இதை அறிந்த மகா விஷணு நரகாசூரனைக் கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு மகனாகப் பிறந்தவன். அந்தவகையில் அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாதபடி பிளான் பண்ணி வரம் ஒன்றைப் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.

அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

Naragasooran
Naragasooran

அப்போதுதான் நரகாசூரனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று மனமுருக வேண்டினான்.

மகாவிஷ்ணுவும், சத்யபாமாவும் அவனுக்கு வேண்டிய வரம் கொடுத்தார்கள். அன்று முதல் நரகாசுரன் மறைந்த அந்நாள் மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன. வாய்ப்பு கிடைத்தால் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.