Nomination plan by Boys Team Bigg Boss : பிக் பாஸ் நிகழ்ச்சி என வரும்போது அதில் டாஸ்க்குகள், சண்டைகள், சர்ச்சைகள் என ஏராளமான விஷயங்கள் பெரிய அளவில் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். இவைகளை தவிர வார இறுதி நாட்களில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரபலமாக வருகை தருவதுடன் ஒரு வார ஆட்டத்தை பற்றி போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவதும் அதிக அளவில் கவனம் பெறும். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி ஒரு ஒரு போட்டியாளர் தொடர்வதையும், வெளியேற்றப்படுவதையும் தீர்மானிக்கும் பொருட்டு நாமினேஷன் என்ற விஷயமும் மிகப்பெரிய ஒரு பங்காக பார்க்கப்படுகிறது.
உதாரணத்திற்கு ஒரு வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டிருக்கும் சூழலில் பிக் பாஸ் வீட்டில் அதிகம் பேர் நாமினேஷன் செய்பவர்களின் அடிப்படையில் தான் மக்கள் வாக்களிக்கவும் செய்கிறார்கள். யார் அதிக முறை நாமினேட் செய்யப்படுகிறார்களோ அவர்கள் டேஞ்சர் சோனில் வருவதுடன் அடுத்த வாரம் வெளியேறுவதற்கான வாய்ப்புகளும் கூட அதிகமாக உருவாகும். பார்ப்பதற்கு நண்பர்கள் போல் நெருங்கி இருந்தாலும் நாமினேஷன் என வரும்போது யார் சிறப்பாக ஆடுகிறார்களோ அவர்களை இலக்காக வைத்து வெளியேற்றவும் முயற்சி செய்வார்கள்.
இதனால் ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் அனைவர் போட்டியாளர்களிடமும் நாமினேஷன் செய்ய போகும் போட்டியாளர்களின் பெயரை சொல்லும் படி பிக் பாஸ் அறிவுறுத்துவார். அந்த வகையில் தமிழில் தற்போது மூன்றாவது வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதிலும் பல போட்டியாளர்கள், சகப் போட்டியாளர்களை நாமினேட் செய்தும் வந்தனர்.
அப்படி ஒரு சூழலில் இந்த வாரம் நாமினேஷன் நடைபெறுவதற்கு முன்பாக கெத்தாக இருந்த பாய்ஸ் அணியை சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளது பிக் பாஸ். முன்னதாக பிக் பாஸின் முதல் நாளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என அணிகள் பிரிக்கப்பட்டது. இதன் முதல் நாளிலேயே பெண்கள் அணி கேட்ட பெட்ரூமையும் ஆண்கள் அணியினர் கொடுத்துள்ளனர். அந்த சமயத்தில் ஒரு நிபந்தனை வைக்கும் ஆண்கள் அணியினர், நீங்கள் கேட்ட பெட்ரூமை கொடுத்ததால் ஒரு வாரம் ஆண்கள் யாரையும் பெண்கள் நாமினேட் செய்யக் கூடாது என்றும் அது எப்போது என்பதை நாங்கள் சொல்வோம் என்றும் கூறுகின்றனர்.
இதற்கு பெண்கள் அணியினரும் சரி எனக்கூற, இந்த வாரம் அந்த சாதகமான விஷயத்தை ஆண்கள் அணி எடுத்துக் கொள்ளவும் தீர்மானித்திருந்தனர். இது பற்றி ஒரு கேப்டனாக பிக் பாஸிடம் கேட்கும் தர்ஷிகா, ஆண்கள் இந்த முறை எந்த பெண்களும் தங்களை நாமினேட் செய்யக்கூடாது என்றும் இதனை நடைமுறைப்படுத்தலாமா என்றும் கேட்கிறார்.
இதற்கு பதில் சொல்லும் பிக் பாஸ், ‘ரூல்ஸ் புக்ல இல்லாததை என்கிட்ட கேக்காதீங்க. இந்த வாரம் கலவையான நாமினேஷன் இருக்கு. யார வேண்டுமானாலும் யார் வேணாலும் நாமினேட் பண்ணலாம்’ என்றும் கூறுகிறார். பெண்கள் அணி மூலம் நமக்கு சாதகம் நடைபெறும் என நினைத்து ஆண்கள் அணியினர் சிலர், முதல் நாளிலேயே போட்டு வைத்த திட்டம் தற்போது பிக் பாஸின் வார்த்தையால் தவிடுபொடியாக உடைந்துள்ளது.