வாராஹியை வழிபடுவதால் இவ்வளவு விசேஷமான பலன்கள் கிடைக்குமா? உகந்த நாள் எது தெரியுமா?

By Sankar Velu

Published:

மனிதனாகப் பிறந்து விட்டாலே பிரச்சனைகளும் வந்து விடுகிறதுரு. யாருக்குத் தான் பிரச்சனை இல்லை. நமக்கு மட்டும் தான் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதற்கு தீர்வு காண்பது தான் புத்திசாலித்தனம். அதற்காகவே நம் முன்னோர்கள் பல வழிபாடுகளை வகுத்து வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று தான் இந்த வாராஹி வழிபாடு. என்னன்னு பார்க்கலாமா…

வராஹியை வழிபட சிறப்பு தினம் பஞ்சமி. இது மாதம் இருமுறை வரும். அபூர்வமாக 3 முறை வரும். பௌர்ணமிக்குப் பிறகு ஒரு பஞ்சமியும், அமாவாசைக்குப் பிறகு ஒன்றுமாக வரும். சிலர் வளர்பிறை பஞ்சமி தான் கும்பிடணும். தேய்பிறையில் தான் கும்பிடணும்னு சொல்றாங்க. அப்படி இல்லை. இரண்டு பஞ்சமியிலும் வழிபடலாம். தவறு கிடையாது.

ஒரு வழிபாடு என்பது வெறும் வழிபாடாக இல்லாமல் நம் உடலோடும் இந்தப் பிரபஞ்ச சக்தியோடும் இணைந்த ஒரு ஆற்றல் சக்தியாக மாறும்போது தான் அதில் இருந்து ஒரு பலனைக் கண்டிப்பாக பெற முடியும்.

நம் உடலும், இந்த உலகமும் பஞ்சபூதங்களால் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கு. இந்தப் பிரபஞ்சத்தோடு நாம் தொடர்பில் இருக்கும்போது நம் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஞானியர்கள் சொன்ன கருத்து. 5வது நாளில் இதை நாம் ஒன்றிணைக்கும்போது அது அதீத சக்தியாக மாறுகிறது.

அதனால் தான் பஞ்சமி என்ற இந்த நாளில் நம்மைக் காக்கக்கூடிய வாராஹி தெய்வத்தை வழிபாடு பண்ண வேண்டும். அதன்மூலம் உடல் சார்ந்த பிரச்சனைகளும், நம் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

பஞ்சமி வாராஹிக்கு சிறப்புக்குரிய நாள். சின்னச் சின்னக் கோவிலுக்குப் போயும் வாராஹி அம்மனைக் கும்பிடலாம். வீட்டில் இருந்தும் வழிபடலாம். வாராஹி விக்கிரகம் இருந்தால் அதை வைத்து வழிபடலாம். இல்லைன்னா சாதாரண அகல்விளக்கு ஏற்றி வழிபடுங்க போதும்.

அந்தத் தீபத்தில் வாராஹி வந்து எழுந்தருளி அருள்புரியணும்னு உள்ளன்போடு வேண்டிக்கொள்ளுங்கள். சிவப்பு, நீலம், வெள்ளை நிற மலர்கள், மரிக்கொழுந்து ஆகியவற்றைப் பயன்படுத்தி வழிபடலாம். குங்கும அர்ச்சனை பண்ணுங்க. வாராஹி மந்திரங்களைச் சொல்லி வழிபடுங்க.

varahi8
varahi

பஞ்சமி திதியில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது நலம். நமக்கு ஏற்படும் பிரச்சனைகள், தீய எண்ணங்கள் விலகும். வறுமை நீங்கும். வாழ்க்கையில் நல்ல ஒரு செல்வ நிலை வரும். நம் உடல், மனம் தூய்மையாகும். நாம் நம்மை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பார்த்தாலே போதும். நம்மை நெருங்கும் எதிர்வினைகள் அகன்று விடும்.

5 பஞ்சமிகள் நாம் தொடர்ந்து செய்வது விசேஷமானது. இந்த அதிசக்திவாய்ந்த வழிபாட்டின் மூலம் நம் மனதில் ஒரு தெளிவும் தைரியமும் பிறக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

வரும் ஐப்பசி மாதம் 5ம் தேதி (22.10.2024) அன்று பஞ்சமி திதி வருகிறது. மிஸ் பண்ணிடாதீங்க.