Bigg Boss Tamil Season 8 Day 11: Talent show நடத்திய Housemates… மனமுடைந்து அழுத தர்ஷா!

By Meena

Published:

Bigg Boss Tamil Season 8 Day 11 இல் housemates ஒருவருக்கு ஒருவர் செட் ஆகி வருவது போல் தெரிகிறது. மதியம் வரை பிக் பாஸ் டாஸ்க்கு கொடுக்காததால் வீட்டின் கேப்டன் சத்தியா நமக்கு தூக்கம் வராமல் இருக்கணும்னா ஏதாவது உங்களோட திறமை வெளிப்படுத்துற மாதிரி ஒவ்வொருத்தரா வந்து ஏதாவது ஆக்ட் மாதிரியே ஏதாவது ஒன்றும் பண்ணுங்க அப்படின்னு சொல்கிறார்.

bigg boss

இதுவும் சூப்பர் ஐடியாவா தான் இருக்கு என்று ஒவ்வொருவரும் தங்களது திறமையை வந்து காட்டினர். ஜாக்குலின் ரஞ்சித் ரஞ்சிதா போன்றோர் நடிப்புத் திறனை வெளி காட்டினர். ஜெபிரி அருமையாக பாடல் பாடினார். முத்து டயலாக் பேசினார். சத்யா பாடி ஷோ காட்டினார். இதுபோல ஒவ்வொருவரும் தங்களது திறமையை காட்டினார். இது பார்ப்பதற்கு கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது. Talent show பார்த்தது போல இருந்தது.

அடுத்ததாக பிக் பாஸ் இந்த வீட்டில் பெரியவர்கள் ஆண்களா? பெண்களா? என்று ஒரு டாஸ்க் கொடுக்கிறார். பிஸிக்கல் டாஸ்க் மாதிரியும் மைண்ட் டாஸ்க் மாதிரியும் கொடுக்கிறார். இது விறுவிறுப்பாகவே இருந்தது. இரண்டு லெவல் முடிந்து விட்ட நிலையில் இறுதி கட்ட லெவல் நாளை நடைபெறும். இதற்கு நடுவில் ஹவுஸ்மேட்ஸ் ஒருவருக்கு ஒருவர் கலாய்த்து கொண்டு இன்றைய தினம் ஜாலியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

இதற்கிடையில் தர்ஷா குப்தா வழக்கம் போல் அழுதுவிட்டார். எல்லோருக்கும் சமைப்பதற்கு வந்த தர்ஷாவை சமையலை கமெண்ட் செய்து ஆண்கள் அணியினர் கிண்டல் அடித்து இருக்கின்றனர். நீ அது நிறைய போடுற இது நிறைய போடுற அப்படி இப்படின்னு சொல்லி கிண்டல் அடித்தவுடன் அவரால் தாங்க முடியவில்லை பாத்ரூம் ஏரியாவிற்கு சென்று தர்ஷிகாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது மனம் உடைந்து அழுகிறார் தர்ஷா.

நான் வந்து எல்லாருக்கும் ஆச ஆசையா நான் சமைக்கிறேன் எல்லாம் நல்லா இருக்கு சொல்லி தான் சாப்பிடறாங்க அதுக்கு அப்புறமா எனக்கு வயிறு வலிக்குது வயித்தால போகுது அப்படி இப்படின்னு சொல்லி பேசி கிண்டல் பண்றாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படின்னு மனமுடைந்து அழுகிறார். உடனே பெண்கள் அணியினர் எல்லோரும் வந்து தர்ஷாவை கிண்டல் அடிக்காதீங்க அவ ரொம்ப சென்சிடிவ் கேரக்டர் அப்படி இப்படின்னு பேசுறாங்க.

bigg boss

இதனால் சற்று அப்செட் ஆன விஷால் ஆண்கள் பெட்ரூமில் அருண் மற்றும் முத்துக்குமாரிடம் இந்த பொண்ணு தர்ஷா எதுக்கெடுத்தாலும் இப்படி அழுதுகிட்டு இருக்கிறத பாக்க கொஞ்சம் சங்கடமா இருக்கு என்று பேசுகிறார். பிறகு தர்ஷாவை கூப்பிட்டு அவர் போட்டியை விளக்கும் விதம் பார்ப்பதற்கே நன்றாக இருந்தது.

தர்ஷா நீ விளையாட வந்திருக்க நீ தனியா தான் விளையாடனும். உனக்கு gang கிடையாது friends கிடையாது யாரும் கிடையாது என்று கேமை பற்றி ரொம்ப அழகாக புரிய வைத்தார் விஷால். தற்போது பிக் பாஸ் கேம் விறுவிறுப்பாக செல்கிறது.