தீபாவளி போனாஸாக 28 கார் மற்றும் 29 பைக்… ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி…

ஒவ்வொரு வருடமும் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தீபாவளி. தீபாவளி என்றாலே பட்டாசுகள் புத்தாடைகள் இனிப்புகள் பலகாரங்கள் தான். இதையும் தாண்டி முக்கியமான விஷயம் ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய தீபாவளி போனஸ்.…

diwali bonus

ஒவ்வொரு வருடமும் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தீபாவளி. தீபாவளி என்றாலே பட்டாசுகள் புத்தாடைகள் இனிப்புகள் பலகாரங்கள் தான். இதையும் தாண்டி முக்கியமான விஷயம் ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய தீபாவளி போனஸ்.

இந்த தீபாவளி போனஸ் ழியர்களுக்கு வேலை செய்வதற்கான உத்வேகத்தை அளிப்பது மட்டுமல்லாமல் பல நடுத்தர குடும்பங்களுக்கு கனவுகளை நிறைவேற்றும் தருணமாக தீபாவளி போனஸ் கைக்கு வரும் நாள் அமைகிறது. ஒரு சில இடங்களில் ரொக்க பணமாக தீபாவளி போனஸ் கொடுப்பார்கள். ஒரு சில இடத்தில் பரிசு பொருட்கள் போலேயும் கொடுப்பார்கள்.

ஆனால் சென்னையைச் சேர்ந்த இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்ளை அள்ளி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். தனது நிறுவனத்தில் ஒன்பது வருடங்கள் பணியாற்றிய ஊழியர்களுக்கு கார்களும் ஏழு வருடங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பைக்குகளும் வழங்கியிருக்கிறார். மொத்தம் 28 கார்களும் 29 பைக்களும் பரிசாக வழங்கியிருக்கிறார். இதில் உயரக bmw காரும் உண்டு.

இதைப்பற்றி ந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் கண்ணன் கூறும் பொழுது ஊழியர்களால் தான் நாங்கள் இன்று உயர்ந்து கொண்டே செல்கிறோம். அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதால் தான் எங்களது நிறுவனம் மென்மேலும் வளர்கிறது. ஆகவே அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த மாதிரி பரிசாக அளித்து உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.