பொழுதுபோக்கு

சூர்யா 44 அந்த மாதிரியான கதை இல்லையா? யாரும் எதிர்பாராத ட்விஸ்டை வச்சிட்டாரே இயக்குனர்

தமிழ் சினிமாவில் சூர்யா ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் கங்குவா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது .சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் கங்குவா.

பல கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். இரண்டு வருடங்களாக இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் சூர்யா. இதுவரை இல்லாத ஒரு சூர்யாவை இந்த படத்தின் மூலம் பார்க்கலாம் என சிறுத்தை சிவா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா இந்த கங்குவா திரைப்படத்தில் வருகிறாராம். அந்த இரண்டு கதாபாத்திரங்களுமே இதற்கு முன் எந்த படத்திலும் சூர்யா பண்ணாத கேரக்டர் என்றும் சிறுத்தை சிவா கூறியிருக்கிறார். அதனை எடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்பாராஜ் படம் என்றாலே ஒரு கமர்சியல் படமாக தான் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தத்தனர். ரஜினியை வைத்து பேட்ட திரைப்படத்தை கொடுத்து ஒரு மாஸ் வெற்றியை கொடுத்தார். அதைப்போல ஜிகர்தண்டா படமும் அவருக்கு ஒரு பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படமாக அமைந்தது.

அதைப்போல சூர்யாவை வைத்து அவர் இயக்கும் இந்த படமும் ஒரு கமர்சியல் படமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ஆக்சன் படமாக இருக்காது. ரொமான்டிக் கலந்த ஒரு காதல் திரைப்படமாகத்தான் வரவிருக்கிறது என சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதுதான் இப்போது வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை வரவழைத்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரொமான்டிக் படமா என அனைவரும் திகைத்துப் போய் இருக்கின்றனர். இருந்தாலும் நீண்ட நாளுக்கு பிறகு சூர்யா மீண்டும் ஒரு ரொமான்டிக் படத்தில் நடிப்பது அவருடைய ரசிகர்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Avatar photo
Chandra R

டிஜிட்டல் ஊடகத் துறையில் 3 வருடமாக பணிபுரிகிறேன். பொழுதுபோக்கு, இசை உள்ளிட்ட தலைப்புகளில் எழுதுவதில் அதிக ஆர்வம். ‘உங்கள் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கிச் செல்லுங்கள்’ என்பதற்கேற்ப பயணித்துக் கொண்டிருக்கிறேன்.