பிக் பாஸ் 8: கெத்து காமிச்சு ஜெஃப்ரியிடம் வாங்கி கட்டிக் கொண்ட தர்ஷா.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம்..

By Ajith V

Published:

Dharsha Gupta vs Jeffrey : பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் சற்று விறுவிறுப்பு குறைந்தும் சில எபிசோடுகள் சென்றாலும் இரண்டாவது வாரம் மிக அசத்தலாக சென்று வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கேப்டன்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் இரண்டாவது வாரத்தில் சத்யா கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட, பெண்கள் அணியில் இருந்து தர்ஷா குப்தா ஆண்கள் அணியிலும், ஆண்கள் அணியில் இருந்து தீபக் பெண்கள் அணியிலும் இணைந்து ஆடி வருகின்றனர்.

Boys Vs Girls என்ற அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வர, போட்டியும் அவர்களுக்கு இடையே தான் நடந்து வருகிறது. மேலும் எதிரணியில் இருந்து ஒரு போட்டியாளர் தங்களுடன் இருப்பதால் பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு அணிகளும் சில திட்டங்கள் தீட்டுவதற்கு தயங்கி தான் வருகிறது. இதன் காரணமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக சென்று கொண்டிருக்க, சமீபத்தில் நடந்த ஷாப்பிங் டாக்கில் 8000 ரூபாயை வென்ற ஆண்கள் அணி 12000 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்தது.

தாங்கள் வென்ற தொகைக்குள் ஷாப்பிங் செய்தால் மட்டும் தான் அந்த பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையில் பாய்ஸ் அணி செய்த தவறினால் பிக் பாஸ் கொடுக்கும் பொருளைத்தான் இந்த ஒரு வாரம் முழுக்க அவர்கள் சமைக்க பயன்படுத்த வேண்டும் என்ற நிலையும் உருவானது. ஆண்கள் அணியில் இணைந்த தர்ஷா குப்தா இந்த தவறினால் பெரிய அளவில் கோபமடைந்திருந்தார்.

பல திட்டங்களை போட்டும் இப்படித்தான் ஷாப்பிங் டாஸ்க்கில் கோட்டை விடுவதா என்றும் உங்கள் அணியில் நான் வந்து இணைந்ததால் இப்போது இந்த ஒரு வாரம் என்னால் சரியாக ஏதும் உண்ண முடியாது என்றும் மிக கோபமாகவும் வார்த்தைகளை விட்டிருந்தார். தர்ஷா குப்தாவின் ஆவேசமிக்க இந்த பேச்சை கேட்டதும் பெண்கள் அணியில் இருந்த அனைவருமே கைத்தட்டி கொண்டாடத் தொடங்கி விட்டனர்.

அதே நேரத்தில் ஆண்கள் அணியை வேண்டுமென்றே சீண்டிப் பார்ப்பதற்காக தர்ஷா குப்தா சிரித்துக் கொண்டே நடந்து சென்றது தெரிய வந்தது. இதனை கவனித்த ஜெஃப்ரி, நீங்கள் வேண்டுமென்றே தான் ஆண்கள் அணியை அவமானப்படுத்த இப்படி செய்கிறீர்கள் என்றும் பெண்கள் அணியில் இருந்து ஷாப்பிங் டாஸ்க்கில் தோல்வியடைந்த போது கூட இப்படி எல்லாம் நீங்கள் பேசியதில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

ஆண்கள் அணியில் சண்டையை உண்டு பண்ணுவதற்காக தான் நீங்கள் சாப்பாடே கிடைக்காமல் போனதற்கு இந்த அளவுக்கு ஆவேசம் அடைகிறீர்கள் என்றும் பெண்கள் அணியில் நீங்கள் ஷாப்பிங் தோற்ற போதும் கூட உங்களுக்கு அனைவரும் ஆதரவாக தான் இருந்தனர் என்றும் தனது விளக்கத்தை கூறுகிறார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத தர்ஷா குப்தா, ஆண்கள் அணிமீது எனக்கு தனிப்பட்ட எந்த வெறுப்பும், போட்டியும் இல்லை என்றும் தனது வாதத்தை முன்வைக்கிறார்.