7 சீசனா நடக்கவே இல்ல.. 8 வது சீசனில் இருந்த பிரச்சனை.. பிக் பாஸ் முடிவை சரியாக கணித்த Fatman ரவீந்தர்..

By Ajith V

Published:

தற்போது தமிழில் ஆரம்பமாகியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எதிர்மறையான கருத்துக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. ஒரு வாரம் மட்டுமே முடிந்துள்ள நிலையில் ஏறக்குறைய 100 நாட்கள் மீதம் இருப்பதால் ரசிகர் அங்கிருக்கும் போட்டியாளர்கள் டாப் கியரில் கேமை எடுத்துச் சென்றால் தான் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதை விட்டுவிட்டு இந்த முறை நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சி அங்கும் இங்குமாக ஏதாவது ஒரு சில இடங்களில் மட்டும் தான் மிக விறுவிறுப்பாக இருந்து வருகிறது. ஒரு போட்டியாளரை பற்றி மற்றவர்கள் புறணி பேசுவதும் என முந்தைய சீசன்களை போல இருந்தாலும் இந்த முறை அவை சற்று அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது.

அதே போல, டாஸ்க் என வரும் போது மட்டும் தான் சுவாரஸ்யம் இருப்பதாவும் மற்ற நேரங்களில் சற்று சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாகவும் ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் 18 போட்டியாளர்கள் இருந்தும் நான்கு அல்லது ஐந்து பேர்களை பற்றி தான் மக்கள் பலரும் கூட பரவலாக பேசியும் வருகிறார்கள்.

இதனால் இனிவரும் நாட்களில் அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்வதற்காக தந்திரமான விளையாட்டில் ஈடுபட்டால் தான் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தான் Fatman ரவீந்தர் முக்கியமான ஒரு விஷயத்தை பிக் பாஸ் வீட்டில் கவனித்து சவுந்தர்யாவிடம் கூறி உள்ளார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களில் மற்றவர்களை பற்றி குறிப்பிடும் டாஸ்க் ஒரு 10 அல்லது 15 நாட்களுக்குப் பிறகுதான் வரும். ஆனால் இந்த சீசனில் முதல் வாரத்தில் சுமார் நான்கு முதல் ஐந்து நாட்களான போதே மற்ற ரியல் ஆக இருப்பவர்கள் யார் என்பது பற்றியும் பேக்கா நடிப்பவர்கள் யார் என்பது பற்றியும் தங்களின் வாக்குகளை தெரிவிக்க பிக் பாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி சவுந்தர்யாவிடம் பேசும் ரவீந்தர், “இந்த டேக்கை மற்றவருக்கு கொடுப்பது போன்ற டாஸ்க் பதினைந்து நாட்களுக்குப் பிறகு வரும். ஆனால் இந்த முறை எப்போது வந்தது என பார்த்தியா. அதை ஏன் செய்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா?. இந்த வீட்டை தற்போது வடிவமைக்கிறார்கள். இந்த வீட்டில் தற்போது நான்கு முதல் ஐந்து பேரை சுற்றி தான் பெரும்பாலான போட்டிகள் உள்ளது.

வர்களை சுற்றி மட்டுமே ஏன் போட்டிகள் இருக்க வேண்டும். மற்றவர்களும் போட்டிக்கு உள்ளே வந்து விளையாட வேண்டும்ன்தற்காக தான் முதல் வாரத்திலேயே இந்த Fake – Real டாஸ்க் கொண்டு வரப்பட்டதுஎன ரவீந்தர் கூறி உள்ளார்.